வங்கதேசத்திற்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியானது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஜூன் மாதம் தொடங்க இருக்கும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் வார்ம் அப் போட்டியாக டி20 தொடரில் இடம் பெற்று விளையாடி வருகின்றன. அதில், பாகிஸ்தான், அயர்லாந்து, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றன.
டி20 தொடரில் இடம் பெற்ற வங்கதேசம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே அணியானது முதலில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இதையடுத்து 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது.
undefined
IPL Best Movements: மைதான ஊழியரை கையெடுத்து கும்பிட்ட ஜஸ்ப்ரித் பும்ரா!
இதில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் பிளெசிங் முசரபானி, பிரையன் பென்னட் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வெலிங்டன் மசகட்சா, லூக் ஜாங்க்வே தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னட் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 70 ரன்கள் குவித்தார்.
தடிவானாஷே மருமணி ஒரு ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சிக்கந்தர் ராஸா 46 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 72 ரன்கள் குவித்து ஆட்டழமிக்காமல் இருந்தார். கடைசியாக ஜொனாதன் காம்ப்பெல் 8 ரன்கள் எடுக்கவே ஜிம்பாப்வே 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஜிம்பாப்வே 1-4 என்று வென்றது.