Sani Peyarchi: இன்று சனியின் வக்ர பெயர்ச்சி...ஏழரை சனியில் இருந்து தப்பித்து, அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்

First Published Jun 5, 2022, 12:15 PM IST

Sani Peyarchi 2022 Palangal: கும்ப ராசியில் பயணிக்கும் சனி பகவான் 2022 ஜூன் 05 ஆம் தேதி வக்ர நிலையில் மாறி பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

shani rashi parivartan 2022

சனியின் வக்ர பெயர்ச்சி 2022:

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் கடந்த ஏப்ரல் 29 அன்று மகர ராசியில் இருந்து தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு மாறினார். இதையடுத்து, ஜூன் 5 ஆம் தேதி, அதாவது இன்று சனி கிரகம் அதன் சொந்த ராசி அடையாளமான கும்பத்தில் சரியாக 03:16க்கு வக்ர நிலையில் மாறி பின்னோக்கி பயணிக்கவுள்ளார்.  இதையடுத்து, சனி பகவான்,  மீண்டும் ஜூலை 12ம் தேதி மகர ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். இங்கு சனி பகவான் ஜனவரி 17, 2023 வரை இருப்பார்.
 

shani rashi parivartan 2022

இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். இதன் போது ஏழரை நாடு சனியோ, சனி தசையோ நடக்கிற ராசிக்காரர்கள் சனியின் கொடுமையான பார்வையை சந்திக்க நேரிடும், இது ரிஷப மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலனை தரும். சிலருக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணும். அப்படி, சனியின் வக்ர பெயர்ச்சி யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

shani

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி, சுப பலன்களை கொடுக்கும். பணியிடத்தில் கூடுதல்  மரியாதை கிடைக்கும். அதுமட்டுமின்றி பொருளாதார நிலையும் மேம்படும். ஆரோக்கியம் மேம்படும்.  உங்களின் திருமண வாழ்க்கை மேம்படும். பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது, இதன் காரணமாக நபரின் நிதி நிலையும் வலுவாக இருக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். 

Shani

கன்னி:

சனி பகவான் வக்ர பெயர்ச்சி, கன்னி ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். சனி ராசியில் உங்கள் குடும்பத்தை முழுமையாக கவனிப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். குடும்ப உறவுகளில் இனிமை அதிகரிக்கும். அதே நேரத்தில், வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். தொழிலில் நிதி நிலை மேம்படும்.

Shani

தனுசு:

சனியின் வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் வாழ்கை தரம் மேம்படும். நீங்கள் எங்காவது பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். 

மேலும் படிக்க....Guru Peyarchi: குருவின் அருளால் அடுத்த ஒரு வருடம் இந்த ராசிகளுக்கு குபேர யோகம்....உங்கள் ராசி இதில் இருக்கா..?

click me!