தலையில் டர்பன்.. மூக்கில் வளையம் நியூ லுக்கில் மிரட்டும் சீயான் விக்ரம்! வைரலாகும் தங்கலான் BTS புகைப்படம்!

First Published Jun 12, 2024, 10:12 PM IST

நடிகர் விக்ரம், தலையில் டர்பனுடன்... மூக்கின் நடுவே வளையம் அணிந்தபடி 'தங்கலான்' படத்தின் ஷூட்டிங்கிங் ஸ்பாட்டில்  எடுத்து கொண்ட BTS புகைப்படம் ஒன்றை விக்ரம் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தொடர் தோல்வி படங்களால் துவண்டு போன நடிகர் விக்ரமுக்கு 'பொன்னியின் செல்வன்' வெற்றி எனர்ஜி பூஸ்டராக அமைந்தது. ஆனாலும் இது மல்டி ஸ்டார் படம் என்பதால், ஒரு தனி ஹீரோவாக தன்னுடைய வெற்றியை திரையுலகில் பதிவு செய்யவேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார் விக்ரம்.

Thangalaan

தன்னுடைய கதாபாத்திரத்திற்காக, உயிரை பணயம் வைக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிக்க கூடிய விக்ரம்.. தற்போது தங்கம் எடுத்துக்கும் தொழிலாளர்களின் கற்காலம் குறித்து பேசும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நடிப்பது நடிகர் விக்ரமுக்கு ஒவ்வொரு நாளுமே மிகவும் சவால் நிறைந்ததாகவே இருந்தது.

ஆல்யா மானசா - சஞ்சீவ் வாங்கிய தனி வில்லாவின் House Warming நிகழ்ச்சி! வாழ்த்த குவிந்த பிரபலங்களின் போட்டோஸ்!
 

Chiyaan Vikram starrer Thangalaan film update out

மேக்கப் போடுவதற்கே 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை ஆகும் என்பதால், காலை நான்கு மணிக்கே இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்க வேண்டும். அதே போல் இவர் போட்ட மேக்கப்பை ரிமூவ் செய்வதற்கும் 2 மணிநேரங்களுக்கு மேல் ஆனதாக கூறப்பட்டது. அதே போல் பல காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார். சண்டை கட்சி படமாக்கப்பட்ட போது விக்ரமின் விலா எலும்பு முறிந்து இரண்டு மாதத்திற்கு பின்னர் மீண்டும் அவர் நடிக்க வந்ததும் அனைவரும் அறிந்ததே.

Thangalaan

அதே போல் இப்படத்தில் நடிக்க நடிகர் விக்ரம் சுமார் 30 கிலோ வரை உடல் எடையை குறைத்தார். மேலும்  படப்பிடிப்பு, காடு, மலை என இயற்க்கை சார்ந்த இடங்களிலும்... சுட்டெரிக்கும் வெளியிலும் எடுக்கப்பட்டதால் ஒட்டு மொத்த படக்குழுவினரும் பல்வேறு சவால்களை கடந்து தான் இப்படத்தை உருவாக்கி உள்ளனர். 

Myna Nandhini: கணவர் பிறந்தநாளுக்கு பல லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மைனா நந்தினி!

விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தின் BTS புகைப்படம் ஒன்றை தற்போது நடிகர் விக்ரம் அவரின் சமூக வலைத்தளத்தில் பதிவிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. தலையில் டர்பன், மூக்கில் வளையம் என ஆளே அடையாளம் தெரியாமல் வித்தியாசமாக விக்ரம் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

பா.இரஞ்சித் இயக்கி உள்ள இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி நடிக்க, மாளவிகா மோகனன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மேலும் பசுபதி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு உள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ambani Family Drink Milk: அம்பானி குடும்பம் குடிக்கிற பால்கூட அரியவகை தானாம்! ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?
 

Latest Videos

click me!