இளையராஜா ஆசை நிறைவேறல! நானும் லிவிங்ஸ்டனும் பிரிய காரணம் 2 பெண்கள் தான்! ஜி.எம்.குமார் ஓப்பன் டாக்!

By manimegalai a  |  First Published Jun 25, 2024, 3:44 PM IST

பிரபல நடிகரும், இயக்குனருமான ஜி.எம்.குமார் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், லிவிங்ஸ்டனிடம்  இருந்து பிரிந்ததற்கு இரண்டு பெண்கள் தான் காரணம் என வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 


தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் பலர், ஒரு கட்டத்திற்கு பின் தங்களின் நடிப்பு திறமைக்கு தீனி போடும் விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அந்த வகையில், 1986 ஆம் ஆண்டு வெளியான 'அறுவடை நாள்' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜி.எம்.குமார். இந்த படத்தில் இவருடன் துணை இயக்குனராகவும், ஸ்கிரீன் பிளே ரைட்டராகவும் பணியாற்றியவர் நடிகர் லிவிங்ஸ்டன் தான்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்ற வேண்டும் என நினைத்த நிலையில்... திடீர் என இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவர்கள் இருவரும் பிரிய காரணமாக அமைந்தது. இது குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ஜி.எம்.குமார் ஓப்பனாக பேசியுள்ளார்.

Latest Videos

undefined

Rishabh Shetty: கல்கியும் காந்தாராவும்.. ஒன்றிணைந்த தருணம்! புஜ்ஜி வாகனத்தை ஓட்டி மகிழ்ந்த ரிஷப்ஷெட்டி!

அவர் கூறியுள்ளதாவது, "நான் இயக்குனராக இருக்கும்போது என்னுடன் சேர்ந்து துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் லிவிங்ஸ்டன். எங்கள் இருவருக்கு இடையேயும் ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது. அதன் பின்னர் அவருடைய வாழ்க்கையில் ஒரு லவ் ஸ்டோரி துவங்கியது. நானும் அந்த நேரத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் இந்த இரண்டு பெண்கள் வந்த பிறகுதான் பிரச்சனையும்... பிரிவும்.. ஏற்பட்டது.

பின்னர் லிவிங்ஸ்டன் என்னிடம் இருந்து பிரிந்து போய் 'பூந்தோட்ட காவல்காரன்' படத்தில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவரை ஒரு சிறந்த நடிகராகவே பல படங்களில் பார்க்க முடிந்தது என தெரிவித்துள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய, 'அறுவடை நாள்' படத்தை இயக்கும்போது, அப்படத்திற்கு இசையமைத்த இசைஞானி இளையராஜா...  நீங்கள் இருவரும் பிரிந்து விடக்கூடாது. எந்த மாதிரியான சூழ்நிலை வந்தாலும் இருவரும் பிரியாதீங்க. உங்களுடைய காம்பினேஷனில் இன்னும் பல படங்கள் வரவேண்டும் என கூறினார். ஆனால் அவரின் அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்பதையும் தெரிவித்துள்ளார்.

ஏஞ்சலினா ஜோலி போல் மாற ஆசைபட்டாரா? பிளாஸ்டிக் சர்ச்சையின் விளைவால் எமி ஜாக்சன் முகம் இப்படி மாறிடுச்சே!

தொடர்ந்து பேசிய ஜி எம் குமார் தங்கள் இருவருடைய வாழ்க்கையிலும் காதல், பெண்கள், என வந்த பிறகு வாழ்க்கையே வேறு மாதிரி மாறிவிட்டதாகவும்... அப்போது நடந்த சம்பவங்களை இப்போது நினைத்தாலும் இப்படி பண்ணி இருக்கக் கூடாது என தன்னுடைய மனதில் அடிக்கடி தோன்றும். ஆனால் அந்த வயசுல புரியாமல் இதுபோன்று முடிவெடுத்து விட்டோம் என வருத்தத்தோடு கூறியுள்ளார்.

ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து.. மருத்துவ செலவுக்கு கூட கஷ்டப்படும் வடிவேலு பட காமெடி நடிகர் வெங்கல்ராவ்!

ஜி.எம்.குமார் 'அறுவடை நாள்' படத்திற்கு பின்னர், பிட்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கினார். அதே போல் கன்னி ராசி, காக்கி சட்டை, மை டியர் மாத்தாண்டன் போன்ற படங்களுக்கு கதை எழுதி உள்ளார் என்பது குறிபிடத்தக்கது. 1993-ஆம் ஆண்டு வெளியான கேப்டன் மகள் படத்தின் மூலம் நடிகராக மாறிய இவர், தற்போது வரை தொடர்ந்து வலுவான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதே போல் இவர் நடித்த 'நவம்பர் மாதம்' மற்றும் 'பேப்பர் ராக்கெட் 'போன்ற வெப் சீரிசுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


 

click me!