ஆண்களே 40 வயசுக்கு அப்புறம் உங்க காலில் இந்த அறிகுறிகள் தெரிஞ்சா அசால்டா இருக்காதிங்க..இதயம் ஆபத்தில் இருக்கு!

By Kalai SelviFirst Published Jun 25, 2024, 3:47 PM IST
Highlights

இதய ஆரோக்கிய மோசமடைந்தால் அதன் அறிகுறிகள் கால்களிலும் தோன்றும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

இதயம் நமது உடலின் மிக முக்கியமான ஒரு உறுப்பு. இதயத்துடிப்புதான் நாம் உயிர் வாழ்வதற்கான சான்று. எனவே, இதயம் எப்பொழுது துடிக்கும் வகையில் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இதற்கு ஆரோக்கியமான உணவை தினமும் சாப்பிட வேண்டும். தவறான உணவு பழக்கம் இதயத்தை நோயுறச் செய்யும்.

அந்த வகையில், இன்று மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கத்தால், இதய ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 40 வயதை எட்டும் ஆண்களுக்கு தமனி அடைப்பு உள்ளிட்ட இதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் இதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. குறிப்பாக இந்த வயதில்.

Latest Videos

பொதுவாகவே, இதய நோய்களின் அறிகுறிகள் பற்றி நாம் பேசினால், மார்பு வலி, சுவாசிப்பதில் சிரமம், எரியும் உணர்வு அல்லது வேகமாக இதயம் துடிப்பது, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் மட்டுமே இருக்கும். ஆனால், இதய ஆரோக்கிய மோசமடைந்தால் அதன் அறிகுறிகள் கால்களிலும் தோன்றும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

ஆம் அதுதான் உண்மை. இந்தப் பாதங்களில் தோன்றும் அறிகுறிகள் குறிப்பாக 40 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு தான் வரும். இதுபோன்ற அறிகுறிகள் உங்கள் பாதங்களில் காணப்பட்டால் அவற்றை சரியான நேரத்தில் கண்டறிந்து, சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் நிலைமையை மிகவும் தீவிரமடைவதே தடுக்கலாம். இப்போது அந்த அறிகுறிகளை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  மாரடைப்பு வருவதை உணர்த்தும் 4 உடல் வலிகள்.. அசால்ட்டா இருக்காதீங்க!

கால்களில் அசெளகரியம் அல்லது தொடர்ந்து வலி:
உங்கள் தொடைகள் அல்லது பிட்டம் ஆகியவற்றில் பிடிப்புகள் வலி மற்றும் அசெளகரியம் போன்ற உணர்வுகளால் நீங்கள் சிரமப்பட்டால், குறிப்பாக நடக்கும்போது உடலில் இந்த பகுதிகளில் விரைப்பு அல்லது வலி இருந்தால், உங்கள் இதயத்தை ஒரு முறை பரிசோதிக்கவும். ஏனெனில் நிபுணர்களின் கூற்றுப்படி, இது உங்கள் கால்களுக்கு செல்லும் இதய தமனிகளில் அடைப்பு காரணமாக இருக்கலாம். தமனிகளில் அடைப்பு காரணமாக ரத்த ஓட்டம் குறைகிறது. இதன் காரணமாக நீங்கள் அவ்வப்போது கால்களில் அறிகுறிகளை காணலாம்.

கால்கள், உள்ளங்கால்களில் உணர்வின்மை அல்லது பலவீனம்:
உங்கள் கால்கள் மற்றும் உள்ளங்கால்கள் சிறிது நேரத்திற்கு பிறகு மரத்து போக ஆரம்பித்தால், மேலும் உங்கள் கால்கள் மிகவும் பலவீனமாக இருப்பதை நீங்கள் உணர்ந்தால் இதுவும் தமனியில் அடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். தமனியில் அடைப்பு காரணமாக ரத்த ஓட்டம் இல்லாததால், கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது பலவீனம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையை புறக்கணிக்காதீர்கள் மற்றும் உங்கள் இதயத்தை உடனே பரிசோதனை செய்யுங்கள்.

இதையும் படிங்க: சில நிமிடங்கள் கோபப்பட்டால் கூட.. இதய பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.. ஆய்வில் பகீர் தகவல்..

தோல் நிறத்தில் மாற்றம்:
பாதங்கள் மற்றும் உள்ளங்கால்களின் தோல் நிறம் அல்லது அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இதய தமனிகளின் அடைப்பை குறிக்கலாம். சரியான அளவு ரத்தம் நீண்ட நேரம் பாதங்களில் சென்றடையவில்லை என்றால், பாதங்கள் மற்றும் உள்ளங்கால்களின் தோல் சற்று கரடு முரடான அல்லது நிறமாற்றத்துடன் தோன்று தொடங்கும். இது தவிர கடுமையான சந்தர்ப்பங்களில் ஆறாத காயங்கள் அல்லது கொப்புளங்கள் பாதங்களில் தோன்றும். இது மாதிரி நடந்தால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

குளிர்ந்த பாதம்:
வெப்பமான காலநிலையில் கூட பாதங்கள் அல்லது கால் விரல்களில் குளிர்ச்சியாக இருப்பது ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம். தமணி அடைப்புகள் ரத்த ஓட்டத்தை மெதுவாக்குகின்றன. இதனால் உங்கள் கால்கள் குளிர்ச்சடைகின்றன. இந்த அறிகுறிகளை நீண்ட காலமாக நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் செல்வது நல்லது.

கால்களில் முடி உதிர்தல்: இவை அனைத்தையும் தவிர கால்களில் திடீரென முடி உதிர்தல் குறிப்பாக ஆண்களுக்கு இதய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். உண்மையில், சரியான அளவு ரத்தம் மயிர்கால்களை அடையவில்லை என்றால் இந்த சூழலையில், விழ ஆரம்பிக்கும்.

இந்த சில அறிகுறிகளை காண்பது சரியான நேரத்தில் சாத்தியமான இதய பிரச்சினைகளை கண்டறிய உதவுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!