அந்தரத்தில் சுழலும் காருக்குள் அஜித்.. இறுதிக்கட்டத்தில் விடாமுயற்சி - தல Fans, இதோ உங்களுக்காக - Viral Video!

அந்தரத்தில் சுழலும் காருக்குள் அஜித்.. இறுதிக்கட்டத்தில் விடாமுயற்சி - தல Fans, இதோ உங்களுக்காக - Viral Video!

Ansgar R |  
Published : Jun 24, 2024, 08:50 PM IST

Vidamuyarchi Mass Video Update : அஸிர்பைஜான் நாட்டில் மீண்டும் விடாமுயற்சி பட பணிகள் துவங்கியுள்ள நிலையில், தல அஜித் ஸ்டண்ட் செய்யும் காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

தல அஜித் நடிப்பில் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு "துணிவு" என்கின்ற திரைப்படம் வெளியானது அனைவரும் அறிந்ததே. அவருடைய ரசிகர்கள் மத்தியில் அந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தல அஜித் அவர்களின் அடுத்த திரைப்பட அப்டேட்டுக்காக அவர்கள் ரசிகர்களை காத்துக் கொண்டிருந்தனர். 

அப்பொழுது தான் லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில், தல அஜித் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிய நிலையில், அப்பட பணிகளை தொடங்கினார் மகிழ் திருமேனி. 

அதன் பிறகு தல அஜித் நடித்து வந்த அந்த திரைப்படத்திற்கு "விடாமுயற்சி" என்ற பெயர் வைக்கப்பட்டது. ஆனால் படத்தின் பெயர் வெளியானதோடு, அடுத்தகட்ட பணிகள் தொடராமல் படத்தின் பணிகள் தாமதமாகி வந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதி முதல் மீண்டும் விடாமுயற்சி பணிகள் வேகமெடுத்ததுள்ளது. 

கடந்த ஜூன் 22ம் தேதி அசர்பைஜான் நாட்டுக்கு தல அஜித் அவர்கள் சென்ற நிலையில், திரிஷா மற்றும் அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்களும் இந்த முறை படபிடிப்பு பணிகளில் கலந்துகொள்ள உள்ளனர். விடாமுயற்சி படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், நடிகர் ஆரவுடன் இணைந்து தல அஜித், புதிய ஸ்டண்ட் காட்சி ஒன்றில் அனாயசமாக நடிக்கும் வீடியோ இப்பொழுது இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?