நெகட்டிவ் விமர்சனம் கிடைத்தாலும் கோடிக்கணக்கில் கல்லா கட்டும் சன்பிக்சர்ஸ்.. பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த ஜெயிலர்..

First Published Mar 20, 2024, 9:46 AM IST

சன் பிக்சர்ஸ் தயாரித்த படங்கள் குறித்தும், இந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

கலாநிதி மாறனின் சன் குழுமம் சன் பிக்சர்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. 2010-ம் ஆண்டு முதல் இந்நிறுவனம் படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படம் எந்திரன். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம்தல் படத்திலேயே நல்ல லாபத்தை பெற்றது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 

சன் பிக்சர்ஸ் 2-வதாக தயாரித்த படம் சர்க்கார். விஜய் – ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான படம் சர்க்கார். துப்பாக்கி, கத்தி படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிடைத்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலு வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.110 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 260 வசூல் செய்தது. எனவே இந்த படமும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபகரமான படமாகவே அமைந்தது. 

மீண்டும் ரஜினியை வைத்து படம் தயாரித்து சன் பிக்சர்ஸ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான படம் தான் பேட்ட. இந்த படத்தில் விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திக், சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவ்ம் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் ரூ.250 கோடி வசூல் செய்தது.2019-ம் ஆண்டு வெளியான அதிக வசூல் செய்த படங்களில் பேட்ட படமும் ஒன்று. இந்த படத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்தது. 

2019-ம் ஆண்டே சன் பிக்சர்ஸ் தயாரித்த அடுத்த படம் காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த இந்த படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குழந்தைகள், குடும்பத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். வெறும் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.130 கோடி வசூல் செய்தது. எனவே இந்த படமும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபகமரமான படமாகவே அமைந்தது. 

Sivakarthikeyan

அதே ஆண்டு சன்பிக்சர்ஸ் தயாரித்த அடுத்த படம் நம்ம வீட்டு பிள்ளை. பாண்டிராஜ் இயக்கிய இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் வெற்றிகரமான படமாக மாறியது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.70 கோடி வசூல் செய்தது. இது ஓரளவு லாபகரமான படமாக அமைந்தது. 

annathe rajanikanth

2021-ம் ஆண்டு சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த மற்றொரு படம் அண்ணாத்த. ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தாலும் வணிக ரீதியில் வெற்றி பெற்ற படமாகவே அண்ணாத்த இருந்தது. ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், ரூ.240 கோடி வரை வசூல் செய்தது. எனவே அண்ணாத்த படமும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தை கொடுத்தது. 

2022- ஆண்டு சன்பிக்சர்ஸ் தயாரித்த படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, வினய், பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் என பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியால் வெற்றிகரமான படமாகவே அமைந்தது. ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.200 கோடி வரை வசூல் செய்தததால் இந்த படமும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்தது. 

2022-ம் ஆண்டிலேயே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான மற்றொரு படம் பீஸ்ட். விஜய்யை வைத்து நெல்சன் திலீப் குமார் இயக்கிய இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வ ராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் அது பாக்ஸ் ஆபிஸ் வசூலை பாதிக்கவில்லை. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.300 கோடி வசூல் செய்தது தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. பீஸ்ட் படத்தின் மூலம் நல்ல லாபம் ஈட்டியது சன் பிக்சர்ஸ்.

2022-ம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான மற்றொரு பாம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கண்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.110 கோடி வரை வசூல் செய்தது.. எனவே இந்த பத்தின் மூலம் சன் பிக்சர்ஸ் நல்ல லாபம் ஈட்டியது. 

20223-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது. ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியாவின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அதிக லாபத்தை கொடுத்த படம் என்றால் அது ஜெயிலர் தான்..

click me!