Suriya - Jyothika: யங் லுக்கில்.. லவ்வர்ஸ் போல் கஃபே முன் செல்ஃபி எடுத்து கொண்ட சூர்யா - ஜோதிகா! வைரல் போட்டோ!

First Published Mar 21, 2024, 5:27 PM IST

45 வயதை கடந்த பின்னரும் இளம் காதல் ஜோடி போல் வலம் வரும், சூர்யா - ஜோதிகா இருவரும் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் பொறாமைப்படும் அளவுக்கு, இளம் காதல் ஜோடிகளாய் வலம் வந்து கொண்டிருக்கின்றனர் சூர்யா - ஜோதிகா நட்சத்திர ஜோடி. இவர்களின் லுக்கை பார்த்தால் இரண்டு குழந்தைக்கு பெற்றோரா என அதிர்ச்சியாக கேட்க்கும் அளவுக்கு செம்ம யுங்காக உள்ளனர்.
 

Jyothika and Suriya

அதிலும் ஜோதிகா மும்பையில் செட்டில் ஆன பின்னர்... அடுத்தடுத்து பல பாலிவுட் படங்களில் பிசியாகி உள்ளார். சமீபத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த 'சைத்தான்' திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது.

Sandhya Raagam: சாரு எடுத்த சபதம்.. தனத்தை கண்டித்த ஜானகி - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்!
 

இதை தொடர்ந்து, இவரது கைவசம் 3 ஹிந்தி படங்கள் உள்ளன. அதே போல் அடிக்கடி பல்வேறு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

நடிகர் சூர்யா, கங்குவா படத்தை தொடர்ந்து.. யார் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹிந்தி படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இருவருமே எவ்வளவு பிசியாக இருந்தாலும், தங்களுக்காகவும், தங்களின் குழந்தைகளுக்காகவும் தவறாமல் நேரம் ஒதுக்கும் நிலையில், தற்போது ஜோதிகாவுடன் சூர்யா கஃபே சென்றபோது எடுத்து கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது.

செழியனுக்கு நடக்கும் திருமண ஏற்பாடு! கலங்கும் பாக்கியா! எழிலுக்கு தெரிந்த வந்த உண்மை? பாக்கியலட்சுமி அப்டேட்!

click me!