Ethirneechal : சீரியல் முடிந்தாலும்.. நட்புக்கு முடிவில்லை! எதிர்நீச்சல் சீரியல் டீமின் ரியூனியன் போட்டோஸ் இதோ

First Published Jun 14, 2024, 10:08 AM IST

சன் டிவியில் அண்மையில் முடிவுக்கு வந்த எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகர், நடிகைகள் மீண்டும் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.

Ethirneechal serial Actress

சன் டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியல் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் நான்கு சிங்கப்பெண்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சீரியல் தொடங்கிய சில மாதங்களிலேயே பிக் அப் ஆனது. அதற்கு காரணம் அதன் விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் அதில் நடித்த நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பும் தான். இதனால் இந்த சீரியலுக்கு டிஆர்பியும் நாளுக்கு நாள் எகிறிய வண்ணம் இருந்தது.

Ethirneechal Serial Team

எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு மற்றுமொரு முக்கிய காரணமாக இருந்தது அதில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து தான். அவர் பேசும் வசனங்கள், அவரின் வில்லத்தனமான நடிப்பு என அவரின் கேரக்டர் மக்கள் மத்தியில் நன்கு ரீச் ஆனது. குறிப்பாக அதில் அவர் பேசிய வசனங்கள் மீம் டெம்பிளேட்டுகளாக மாறி சமூக வலைதளங்களிலும் டிரெண்ட் ஆனது. இதனால் எதிர்நீச்சல் சீரியல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக தொடங்கியது.

இதையும் படியுங்கள்... தமிழ் பிரபலங்களை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் வைக்கும் வரலட்சுமி!

Ethirneechal Serial Cast and Crew

எதிர்நீச்சல் சீரியல் வெற்றிநடைபோட்டு வந்த சமயத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரின் மறைவு சீரியல் குழுவினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த சின்னத்திரை வட்டாரத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் மறைவுக்கு பின்னர் எதிர்நீச்சல் சீரியல் கடும் சரிவை சந்தித்தது.

Ethirneechal serial actress

மாரிமுத்து இடத்தை நிரப்ப ஆள் கிடைக்காமல் திண்டாடி வந்த நிலையில், இறுதியாக வேல ராமமூர்த்தியை ஆதி குணசேகரனாக நடிக்க வைத்தனர். அவர் திறமை வாய்ந்த நடிகராக இருந்தாலும் அவரின் நடிப்பு மாரிமுத்து அளவுக்கு இல்லை என்பது தான் பலரும் முன்வைத்த விமர்சனமாக இருந்தது. பின்னர் படிப்படியாக டிஆர்பியிலும் இந்த சீரியல் மீண்டு வந்த நிலையில், திடீரென அந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வந்தது சன் டிவி.

Ethirneechal Serial reunion

கடந்த வாரத்துடன் எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்தது. அந்த சீரியல் முடிந்தாலும் அதில் நடித்த நடிகர், நடிகைகள் மீண்டும் அந்த சீரியல் படமாக்கப்பட்ட வீட்டில் ஒன்றுகூடி இருக்கின்றனர். அவர்களுக்கு இயக்குனர் திருச்செல்வம் நினைவுப் பரிசை வழங்கி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

இதையும் படியுங்கள்... மங்காத்தா மாதிரி மாஸ் காட்டினாரா? இல்ல சுறா போல் புஸ்சுனு ஆனதா? விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா விமர்சனம்

Latest Videos

click me!