மங்காத்தா மாதிரி மாஸ் காட்டினாரா? இல்ல சுறா போல் புஸ்சுனு ஆனதா? விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா விமர்சனம்
Maharaja Movie Review : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் அவரின் 50வது படமான மகாராஜா குறித்த எக்ஸ் தள விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ என எந்த ரோல் கொடுத்தாலும் அசால்டாக நடித்து அப்ளாஸ் வாங்கும் ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். அவரின் 50-வது படம் மகாராஜா. இப்படத்தை குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் அபிராமி, மம்தா மோகன் தாஸ், நட்டி நட்ராஜ், அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
மகாராஜா திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 50வது படம் என்பது நடிகர் அஜித்துக்கு சக்சஸ்புல்லாக அமைந்தது. ஆனால் விஜய்க்கு அவரின் 50வது படமான சுறா வெற்றிகரமாக அமையவில்லை. அந்த வரிசையில் விஜய் சேதுபதிக்கு அவரது 50வது படம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... அன்று குடும்ப கஷ்டத்தால் துபாய்க்கு வேலைக்கு சென்ற விஜய்சேதுபதி; இன்று மகாராஜாவாக Burj Khalifa-ல ஜொலிக்கிறார்
மகாராஜா படம் பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ் அப்படத்தை பாராட்டி தள்ளியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது : “மகாராஜா, என்ன ஒரு அருமையான திரைக்கதை, நித்திலன் நீங்கள் தான் இப்படத்தின் ஸ்டார். தமிழ் சினிமாவிற்கு இது ஒரு பெருமைமிகு படம். விஜய் சேதுபதிக்கு 50வது படம் இதைவிட சிறப்பாம அமைய முடியாது. வழக்கம்போல் அவரை திரையில் பார்ப்பது விருந்தாக அமைந்துள்ளது. அனுராக் கஷ்யப்பின் ரோல் வெறித்தனமாக உள்ளது. நட்டி நட்ராஜ், அபிராமி, மம்தா சரியான தேர்வு. பிலோமின் ராஜின் படத்தொகுப்பு சீட்டின் நுனியில் அமர வைக்கிறது. இப்படி ஒரு அருமையான படத்தை கொடுத்த குழுவினருக்கு நன்றி என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் போட்டுள்ள பதிவில், தமிழில் சிறந்த திரைக்கதை உடன் வெளிவந்த படங்களில் மகாராஜாவும் ஒன்று. சமூக கருத்துடன் கூடிய படத்தில் எமோஷனலாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு சென்றுள்ளனர். இயக்குனர் நித்திலன் அருமையாக படத்தை எடுத்துள்ளார். விஜய் சேதுபதி வேறலெவல் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். சிங்கம் புலி, அருள்தாஸ், நட்ராஜ், அனுராக் கஷ்யப் ஆகியோர் சூப்பராக நடித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி போட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மகாராஜா படம் பிரம்மிப்பூட்டுகிறது. நிச்சயமாக இது ஒரு தனித்துவமான படம், விஜய் சேதுபதி ஆத்மார்த்தமாக நடித்துள்ளார். இயக்குனர் நித்திலன் ஸ்பெஷலான படமாக இதை கொடுத்திருக்கிறார். கதாபாத்திர தேர்வு அருமை, அவர்களின் நடிப்பும் யதார்த்தமாக உள்ளது என பாராட்டி இருக்கிறார்.
படம் பார்த்த நெட்டிசன் போட்டுள்ள பதிவில், இதுதாண்டா சினிமானு சொல்லும் அளவுக்கு ஒரு படம் தான் மகாராஜா, இந்த ஆண்டின் சிறந்த படம் இது. வேறலெலவ் திரைக்கதை, மறக்கமுடியாத இசை, விஜய் சேதுபதி மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். அவரின் கெரியர் பெஸ்ட் நடிப்பு இது. இயக்குனர் நித்திலன் நீங்கள் ஒரு ராக்ஸ்டார், இதுபோன்று நிறைய படங்களை கொடுங்கள் என சிலாகித்து பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், விஜய் சேதுபதி நடிப்பு சூப்பர். அருமையான கதாபாத்திர தேர்வு. முதல் பாதி மெதுவாக நகர்கிறது. காமெடி ஒர்க் அவுட் ஆகி உள்ளது. காட்சியமைப்பு கிளைமாக்ஸை கணிக்கும்படி உள்ளது. வன்முறை அதிகமாக இருக்கிறது. எழுத்து மற்றும் படத்தொகுப்பு அருமை. நான் லீனியராக கதை நகர்வது விறுவிறுப்பை கூட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Ilaiyaraaja : பாட்டுக்கு உரிமை கோர முடியாது... இளையராஜாவுக்கு செக் வைத்த இசை நிறுவனம்