- Home
- Gallery
- அன்று குடும்ப கஷ்டத்தால் துபாய்க்கு வேலைக்கு சென்ற விஜய்சேதுபதி; இன்று மகாராஜாவாக Burj Khalifa-ல ஜொலிக்கிறார்
அன்று குடும்ப கஷ்டத்தால் துபாய்க்கு வேலைக்கு சென்ற விஜய்சேதுபதி; இன்று மகாராஜாவாக Burj Khalifa-ல ஜொலிக்கிறார்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படத்தின் புரமோஷன் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் கோலாகலமாக நடைபெற்றது.

Vijay Sethupathi
நடிகர் விஜய் சேதுபதி இன்று பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார். ஒரு காலகட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் ஹீரோவாக அறிமுகமாகி, வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார். ஹீரோக்கள் பெரும்பாலும் வில்லனாக நடிக்க தயங்குவார்கள், ஆனால் விஜய் சேதுபதி எந்த வித ரோலாக இருந்தாலும் சரி அசால்டாக நடித்து அசத்தும் அசாத்திய கலைஞனாக வலம் வந்தார்.
Vijay Sethupathi in Burj Khalifa
ஒரு கட்டத்தில் இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை காட்டிலும் வில்லனாக நடிக்கும் படங்களுக்கு மவுசு அதிகமான, இதனால் சுதாரித்துக் கொண்ட விஜய் சேதுபதி, இனிமேல் வில்லனாக நடிக்கக்கூடாது என முடிவெடுத்தார். தற்போது அவர் நடிப்பில் மகாராஜா என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இது நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாகும்.
இதையும் படியுங்கள்... Star : பில்டப் இன்றி சைலண்டாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது கவினின் ஸ்டார் திரைப்படம்... அதுவும் இந்த ஓடிடி தளத்திலா?
maharaja Movie
மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் மம்தா மோகன் தாஸ், அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. மகாராஜா படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்பத்திற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக இப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் துபாய் சென்றிருந்தனர்.
Vijay Sethupathi then and Now
துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் மகாராஜா படத்தின் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அப்போது விஜய் சேதுபதி எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இன்று புர்ஜ் கலிஃபாவில் தன் போட்டோ வரும் அளவுக்கு உயர்ந்துள்ள விஜய் சேதுபதி, சினிமாவுக்கு வரும் முன்னர் குடும்ப கஷ்டத்தால் துபாய்க்கு வேலைக்கு சென்று பணியாற்றினார். அப்போது எடுத்த புகைப்படத்தை, புர்ஜ் கலிஃபா முன் அவர் தற்போது எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு ‘இது தாண்டா வளர்ச்சி’ என மீம் போட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தொட்டதெல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்.. ரூ.3100 கோடி சொத்து.. இந்தியாவின் பணக்கார ஸ்டார் கிட் இவர் தான்..