Ilaiyaraaja : பாட்டுக்கு உரிமை கோர முடியாது... இளையராஜாவுக்கு செக் வைத்த இசை நிறுவனம்
இசைஞானி இளையராஜா பாடல்களுக்கு உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதத்தை முன்வைத்து உள்ளது.

Ilaiyaraaja
இளையராஜா இசையில் வெளிவந்த சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ மற்றும் அகி ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருக்கின்றன. அந்நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்த பின்னரும் காப்புரிமை பெறாமல் தன் பாடல்களை பயன்படுத்தி வருவதாக கூறி இளையராஜா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இசைஞானியில் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாக கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Ilaiyaraaja song copyrights Case
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் எக்கோ நிறுவனம் தரப்பில், காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதால், அவர்களுடன் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாங்கள் பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி மேல்முறையீடு செய்யபட்டது.
இதையும் படியுங்கள்... திரிஷா, நயன்தாராலாம் ஓரம்போங்க... இனி சம்பள விஷயத்தில் ராஷ்மிகா தான் டாப்பு - ஒரு படத்துக்கு இத்தனை கோடியா?
Isaignani Ilaiyaraaja
எக்கோ நிறுவனம் தொடர்ந்த இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இசை நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இசையமைப்பாளர்கள் ஊதியம் பெற்று பணியாற்றுவதால் அவருக்கு ராயல்டி தவிர அனைத்து உரிமையையும் இழந்துவிட்டதாக வாதிட்டார்.
Ilaiyaraaja vs Echo
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட எக்கோ நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளருடன் எந்தவித ஒப்பந்தமும் செய்துகொள்ளாத இளையராஜா, பாடல்கள் மீது எந்தவித உரிமையும் கோர முடியாது என வாதிட்டார். மேலும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளர் எனவும் அவர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து இளையராஜா தரப்பு வாதத்துக்காக வருகிற ஜூன் 19-ந் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படியுங்கள்... Vijay TV Serial Climax: ஒரே வருடத்தில் முடிவுக்கு வரும் விஜய் டிவி சூப்பர் ஹிட் தொடர்! எந்த சீரியல் தெரியுமா?