ரஜினி, மம்முட்டி முதல் துல்கர் வரை.. பிரபல உச்ச நடிகர்களின் அரிய Unseen வெட்டிங் போட்டோஸ் இதோ..

First Published Jun 20, 2024, 5:12 PM IST

ரஜினிகாந்த் - லதா, சிரஞ்சீவி - சுரேகா, மம்முட்டி - சல்ஃபத் உள்ளிட்ட பிரபலங்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வர்கின்றன.

South Superstars Wedding Pics

பிரபல நடிகர் நடிகைகளில் பல அரிய மற்றும் பார்க்கப்படாத சிறு வயது புகைப்படங்கள் அல்லது திருமண புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர்களின் இந்த புகைப்படங்கள் எப்போதும் ரசிகர்களால் விரும்பப்படுகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்த் - லதா, சிரஞ்சீவி - சுரேகா, மம்முட்டி - சல்ஃபத் உள்ளிட்ட பிரபலங்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வர்கின்றன.

Rajini - Latha Wedding Photo

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தலைவர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார், 40 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் அவரு ரஜினிகாந்த், பிப்ரவரி 26, 1981 அன்று ஆந்திராவில் லதாவை மணந்தார், மேலும் நடிகர் தனது பிஸியான படப்பிடிப்பிற்கு மத்தியில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார். ரஜினி - லதா தம்பதிக்கு ஐஸ்வர்யா - சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

Chiranjeevi Wedding Pics

மெகாஸ்டார் சிரஞ்சீவி, மறைந்த மூத்த தெலுங்கு நடிகர் அல்லு ராமலிங்கய்யாவின் மகள் சுரேகாவை பிப்ரவரி 20, 1980 இல் திருமணம் செய்தார். தம்பதியருக்கு சுஷ்மிதா மற்றும் ஸ்ரீஜா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது மகன் ராம் சரண். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

Mammmootty Wedding Pics

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி 1979 இல் சல்ஃபத்தை மணந்தார். தனது திருமணம் நடந்த உடனேயே மம்முட்டி தனது முதல் படத்தில் நடித்தார். பின்னர் ஓரிரு வருடங்களில் மலையாள சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக உருவெடுத்தார். இந்த தம்பதிக்கு சுருமி மற்றும் துல்கர் சல்மான் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 

Mahesh Babu Wedding Pics

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு 2005 ஆம் ஆண்டு நம்ரதா ஷிரோத்கரை மணந்தார். தம்பதியருக்கு கவுதம் கிருஷ்ணா என்ற மகனும், சித்தாரா என்ற மகளும் உள்ளனர். குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய மகேஷ் பாபு 1999 இல் ராஜ குமாருடு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்..

Vijay Sangeetha Wedding Pics

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக விஜய் திகழ்கிறார். இவர் 1999 இல் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும்,  திவ்யா ஷாஷா என்ற மகளும் இருக்கிறார்.

Ajith - Shalini Wedding Pics

அமர்க்களம் படத்தில் நடித்த பிறகு நடிகர் அஜித்தும் நடிகை ஷாலினியும் காதலித்து வந்தனர். இந்த ஜோடி பின்னர் ஏப்ரல் 2000 இல் திருமணம் செய்து கொண்டனர். அஜித்தை திருமணம் செய்து கொண்ட பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். இந்த நட்சத்திர ஜோடிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

Suriya Jyothika Wedding Pics

சூர்யாவும் ஜோதிகாவும் 1998 ஆம் ஆண்டு முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர். இவர்களுக்கு 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.Surya

Dhanush Wedding Pics

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004 இல் ஒரு நெருக்கமான திருமணத்தில் திருமணம் செய்து கொண்டனர் மற்றும் தென்னிந்திய திரையுலகின் மிகவும் விரும்பப்பட்ட நட்சத்திர ஜோடிகளில் ஒன்றாக இருந்தனர். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். எனினும் கடந்த 2022-ம் ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி தங்கள் பிரிவை அறிவித்தனர்.

Dulquer Salmaan Wedding Pics

நடிகர் மம்முட்டியின் மகனும் நடிகருமான நடிகர் துல்கர் மலையாளம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் அமல் சுபியாவை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

Latest Videos

click me!