ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிப்பரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில்... நேற்றைய எபிசோடில் தீபா ரம்யாவுடன் சாமியாரை சந்திக்க சென்ற நிலையில், இன்று அரங்கேற போகும் பரபரப்பான தருணங்கள் பற்ற பார்க்கலாம். அதாவது, ரியா, திடீர் என ஐஸ்வர்யாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட, அவள் நான் உன்னை மாட்டி விட போலீசை கூட்டிட்டு வரல ஒரு வழியாக சமாளிக்கிறார்.
24
Zee Tamil Karthigai deepam serial
சுரேஷ், ரியா அபிராமியை சுட்டு தள்ளிய வீடியோவை பார்த்து கொண்டிருக்க, அப்போது சுரேஷுக்கு ரியா போன் செய்து, இங்க பாரு மரியாதையா அந்த வீடியோவை என்கிட்ட கொடுத்துடு, உனக்கு தேவையான பணத்தை நான் தரேன் என்று மிரட்டுகிறாள். அதே சமயம் போலீசும் சுரேஷை கூப்பிட்டு வார்னிங் கொடுத்து அனுப்ப, அடுத்து அருண், ஆனந்த், சுரேஷ் வீட்டை சுற்றி வளைத்து கதவை தட்ட இவர்களை பார்த்த போட்டோகிராபர் இது பெரிய பிரச்சனை போல, இங்கிருந்து எப்படியும் எஸ்கேப் ஆகிவிட வேண்டும் என பின்வழியாக தப்பித்து ஓடுகிறார்.
அருணும், ஆனந்தும் அவனை துரத்தி பிடிக்க முயற்சி செய்தும்... அது முடியாமல் விட்டு விடுகின்றனர். அடுத்து தீபாவும், ரம்யாவும் ஆசிரமத்திற்கு வருகின்றனர், அங்கு 20 பேர் வெளியே தூங்கி கொண்டிருக்க ஒருவன் வாங்க வாங்க சாமியார் உங்களுக்காக தான் காத்திட்டு இருக்காரு என சொல்கிறான். இந்த சாமியாரை நினைத்த உடனே எல்லாம் பார்க்க முடியாது, யாரை பார்க்கணும் என்பதை அவர் தான் முடிவு பண்ணுவார் என்று அந்த நபர் ஓவர் பில்டப் வேர கொடுக்கிறார்.
44
Karthigai deepam serial Today Episode
ரம்யாவும் நானும் விசாரிச்சேன், அவரே நம்ம பேர் என்னனு கூட சொல்வாருன்னு கேள்வி பற்றுறுகேன் என்று வாயில் வந்த பொய்யெல்லாம் சொல்ல, பிறகு உள்ளே சென்று சாமியாரை சந்திக்க அவர் உங்க பேர் ரம்யா.. உங்க பேர் தீபா என்று பெயரை மாற்றி... மாற்றி சொல்ல ரம்யா ஷாக் ஆகிறாள். இதிலேயே அந்த சாமியார் மீது தீபாவுக்கு டவுட் வந்திருந்தாலும்... இதனை ரம்யா எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.