Trichy Video: திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஜோடியாக தென்பட்ட 9 அடி நீள அரக்கன்; பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு

Jun 26, 2024, 11:25 AM IST

திருச்சி காவிரி ஆற்றில் தற்பொழுது நீர்வரத்து குறைந்த அளவே உள்ளது.  அப்பகுதியில் உள்ளவர்கள் காவிரி ஆற்றில்  குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென காவிரி பாலத்தின் மேல் நடந்து சென்ற பொதுமக்கள் சிலர் காவிரி ஆற்றில் முதலை மிதப்பதை கண்டுள்ளனர். 

இதனையடுத்து முதலையை காண்பதற்காக ஆற்றுப்பாலதுதில் கூட்டம் கூடியது. அப்பொழுது காவிரி ஆற்றில் 2 முதலைகள் இருப்பது தெரியவந்தது. காவிரி பாலத்தில் இருந்து பொதுமக்கள் முதலையை பார்த்ததால் அங்கு கூட்டம் கூடியது. 

அதில் ஒரு  முதலை  கரையில் இருந்தது.   இதனையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். அங்கு கூடியிருந்த பொது மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்திய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் முதலையை மீண்டும் ஆற்றுக்குள் செல்ல விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.