- Home
- Gallery
- Indraja : திருமணமான மூன்றே மாதத்தில் குட் நியூஸ் சொன்ன ரோபோ சங்கர் மகள் இந்திரஜா - குவியும் வாழ்த்து
Indraja : திருமணமான மூன்றே மாதத்தில் குட் நியூஸ் சொன்ன ரோபோ சங்கர் மகள் இந்திரஜா - குவியும் வாழ்த்து
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.

indraja karthick
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் காமெடியனாக கலக்கியவர் தான் ரோபோ சங்கர். சின்னத்திரையில் ஜொலித்த ரோபோ சங்கருக்கு, படிப்படியாக சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாபுலர் ஆன ரோபோ சங்கர் ஒரு கட்டத்தில் உடல் மெலிந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார்.
indraja husband karthick
குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவரை படிப்படியாக சிகிச்சை மூலம் மருத்துவர்கள் மீட்டெடுத்தனர். குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்த பின்னர் தற்போது மீண்டும் அதே எனர்ஜியுடன் சினிமாவில் நடித்து வருகிறார் ரோபோ. இவருக்கு இந்திரஜா என்கிற மகளும் உள்ளார். அவரும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். குறிப்பாக விஜய்யின் பிகில் படம் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமான இந்திரஜா. அதன்பின் சூரிக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்தார்.
இதையும் படியுங்கள்... முத்தமும் அரவணைப்பும் கிடைச்சது... சரிகமப டெடிகேஷன் ரவுண்டுக்கு பின் மாறிய வாழ்க்கை; மனம் திறந்த ஸ்வேதா
Robo shankar daughter Indraja
அவர் நடித்த இரண்டு படங்களுமே ஹிட் ஆனதால், சினிமாவில் கோவை சரளா போல் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திரஜா, திடீரென திருமணம் செய்துகொண்டார். கடந்த மார்ச் மாதம் தன்னுடைய மாமா கார்த்திக்கை காதலித்து கரம்பிடித்தார் இந்திரஜா. இவர்களது திருமணம் மதுரையில் நடைபெற்றது. இதையடுத்து சென்னையில் நடத்தப்பட்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கோலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Indraja participate in Mr and Mrs Chinnathirai 5
தற்போது இந்திரஜாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், அவர் குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார். அதன்படி விஜய் டிவியில் விரைவில் தொடங்க உள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் தன்னுடைய கணவர் கார்த்திக் உடன் சேர்ந்து ஜோடியாக கலந்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார் இந்திரஜா. திருமணத்துக்கு பின் அவர்கள் இருவரும் ஜோடியாக பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஸ்ரீதேவி, ப்ரீதா மிஸ்ஸிங்.. அனிதா விஜயகுமார் பகிர்ந்த.. மெகா ஃபேமிலியின் ராயல் டின்னர் நைட் போட்டோஸ்!