Latest Videos

EGG Curry Recipe with Simple ingredients ஒருமுறை இப்படி முட்டை குழம்பு செஞ்சு கொடுங்க... தட்டு காலியாகும்!

By Kalai SelviFirst Published Jun 27, 2024, 2:46 PM IST
Highlights

EGG Curry Recipe with  Simple ingredients : இந்த பதிவில் தேங்காய் பால் முட்டை குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இன்று உங்கள் வீட்டில் முட்டை குழம்பு செய்யப் போகிறீர்கள் என்றால் ஒரு முறை தேங்காய் பால் சேர்த்து செய்து சாப்பிடுங்கள். இந்த வகை முட்டை குழம்பானது சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பது மட்டுமின்றி, செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும் பேச்சுலர் கூட இந்த முட்டை குழம்பை செய்து சாப்பிடலாம். ஒருமுறை இந்த முட்டை குழம்பு உங்கள் வீட்டில் செய்து கொடுங்கள். வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் தேங்காய் பால் முட்டை குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  ஹோட்டல் ஸ்டைலில் டேஸ்டான எக் பிரைடு ரைஸ்.. ஒருமுறை செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க!

தேங்காய் பால் முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
பட்டை - 1 சின்னது
கிராம்பு - 1
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 5
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்கு 
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க: வீடு மணக்க, கை மணக்க செட்டிநாடு முட்டை குழம்பு; செஞ்சு அசத்துங்க!!

செய்முறை:
தேங்காய்ப்பால் முட்டை குழம்பு செய்ய முதலில் எடுத்து வைத்த முட்டையை வேக வைத்து, அதன் ஓட்டை நீக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து அதே அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து நான்கு வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும் அதில் மஞ்சள் தோல் மிளகாய்த்தூள் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குறைவான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு அதில் எடுத்து வைத்த தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். 

குழம்பு ஓரளவு கட்டியாக இருக்கும் போது அதில் ஏற்கனவே வறுத்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கொதிக்க விடுங்கள். சிறிது நேரம் கழித்து அதில் வேகவைத்து எடுத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டி குழம்பில் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை மேலே தூவவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் தேங்காய் பால் முட்டை குழம்பு தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!