ருசியான பீட்ரூட் புலாவ்.. சுலபமாக செய்யலாம் வாங்க.. ரெசிபி இதோ!

By Kalai Selvi  |  First Published Jun 26, 2024, 3:24 PM IST

இந்த பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பீட்ரூட் புலாவ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.


பீட்ரூட் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.   ஆனால் உங்கள் குழந்தைகள் பீட்ரூட் சாப்பிடவில்லை என்றால் அவர்களுக்கு பீட்ரூட்டில் புலாவ் செய்து கொடுங்கள். அதுவும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் இந்த பீட்ரூட் புலாவ் அடைத்துக் கொடுத்தால், டிபன் பாக்ஸ் காலியாகும். அந்த அளவுக்கு இதன் சுவை அருமையாக இருக்கும் முக்கியமாக இந்த பீட்ரூட் துலாப் செய்வது ரொம்பவே ஈசி. சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பீட்ரூட் புலாவ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  இனி வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் செய்யலாம்.. ரெசிபி இதோ..!

Tap to resize

Latest Videos

பீட்ரூட் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
பீட்ரூட் - 3/4 கப்
பச்சை பட்டாணி - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பட்டை - 1 (சின்னது)
கிராம்பு  - 2
ஏலக்காய் - 1
சின்ன வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - 1 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 1/2 ஸ்பூன்

இதையும் படிங்க:  செம்ம சுவையான தேங்காய் பால் பட்டாணி பிரியாணி.. ரெசிபி இதோ!

செய்முறை:
பீட்ரூட் புலாவ் செய்ய முதலில், எடுத்து வைத்த பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்த சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும். அவை நன்றாக சூடானதும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும் பிறகு இதில் அரைத்து வைத்த மசாலா மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை வரும் வரை போகும் வரை வதக்கவும். முக்கியமாக குறைந்த தீயில் வைத்து வதக்கவும். அப்போதுதான் அடிப்பிடிக்காது. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வெந்ததும் அதில் கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். பிறகு அதில், பொடியாக நறுக்கி வைத்த பீட்ரூட் மட்டும் மற்றும் மற்றும் மற்றும் பட்டாணியை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்து கழுவி வைத்து அரிசியையும் இதனுடன் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு தண்ணீரை ஊற்றி குக்கரை மூன்று விசில் விட்டு பின் இறக்கி, அதில் பொடியாக நறுக்கி வைத்து கொத்தமல்லியை தூவவும். அவ்வளவுதான் டேஸ்டான பீட்ரூட் புல்லா தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!