சிக்கன் பிரியாணியை மிஞ்சும் சுவையில் 'காடை பிரியாணி' .. சூப்பரான டேஸ்ட்... ரெசிபி இதோ!

By Kalai Selvi  |  First Published Jun 26, 2024, 2:05 PM IST

இந்த பதிவில் காடை பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.


பிரியாணி என்ற பெயரை கேட்டாலே நம் அனைவரது நாவிலும் எச்சில் ஊறும். பிரியாணியை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. யாருக்கு தான் பிரியாணி பிடிக்காது சொல்லுங்களே. ஏனெனில் அந்த அளவிற்கு அதன் சுவையும் மணமும் அப்படி அருமையாக இருக்கும்.  மேலும், மூன்று வேளையும் பிரியாணியை சாப்பிட கொடுத்தால் கூட வேண்டாம் என்று சொல்லவே மாட்டோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்கள். பிரியாணிகளில் பல வகைகள் உண்டு. அதாவது, சிக்கன் பிரியாணி, பீஃப் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, பன்னீர் பிரியாணி  போன்றவை ஆகும்.

ஆனால், நீங்கள் உங்கள் வீட்டில் எப்போதாவது காடை பிரியாணி சமைத்திருக்கிறீர்களா? ஒருவேளை அப்படி செய்யவில்லை என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. இந்த காடு பிரியாணி சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.  வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் காடை பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: செம்ம சுவையான தேங்காய் பால் பட்டாணி பிரியாணி.. ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்:
காடை - 2
பாஸ்மதி அரிசி - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பட்டை - 1 
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
தயிர் - 1/2 கப் 
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

அரைப்பதற்கு...
பச்சை மிளகாய் - 3 
புதினா - 1 கப்
கொத்தமல்லி - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கறி மசாலா தூள் - 1/2 ஸ்பூன்

இதையும் படிங்க:  பாய் வீட்டு மட்டன் பிரியாணி ஒருமுறை இப்படி செய்ங்க.. திரும்பத் திரும்ப சாப்பிடுவீங்க!

செய்முறை:
முதலில் எடுத்து வைத்த காடையை நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து, அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊர வைக்கவும். பிறகு பாசுமதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள் கறி மசாலா தூள் புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அவை நன்றாக சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அரைத்து வைத்த மசாலாவை இதில் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தயிரையும் சேர்கவும். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு அதில் ஊற வைத்த பாஸ்மதி அரிசி மற்றும் காடையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை நான்கு விசில் வரும் வரை விட்டு இறக்க வேண்டும். அவ்வளவுதான் டேஸ்டான கடை பிரியாணி ரெடி! 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!