இந்த பதிவில் பேச்சுலர்ஸ் காண வெங்காய சாம்பார் செய்யும் முறை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் வெளியூரில் தங்கி வேலை பார்த்து கொண்டிருக்கிறீர்களா.? குறிப்பாக உங்களுக்கு அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடும் பழக்கம் உண்டா..? ஹோட்டல் சாப்பாடு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் சிம்பிளாக சூடான சாதத்திற்கு ஒருமுறை வெங்காயம் சாம்பார் செய்து பாருங்கள். இந்த வெங்காய சாம்பார் செய்வது ரொம்பவே எளிதானது. அதன் சுவையும் அருமையாக இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் வெங்காய சாம்பார் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
வெங்காய சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 11/2 ஸ்பூன்
புளிசாறு - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காய சாம்பார் செய்யும் முதலில் எடுத்து வைத்த துவரம் பருப்பை நன்றாக கழுவி, பின் அதை குக்கரில் போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, ஐந்து விசில் விட்டு இறக்கி கொள்ளுங்கள். குக்கரில் விசில் போனதும் அதைத் திறந்து பருப்பை மசித்து கொள்ளுங்கள்.
இதனை அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்த பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தையும் அதில் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நறுக்க தக்காளியும் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அதில் சாம்பார் பொடி சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் அவித்து வைத்த பருப்பை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
இறுதியாக ஏற்கனவே, கரைத்து வைத்த புளிக்கரைசலை அதில் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இதனுடன் சிறிதளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் பேச்சுலர்ஸ் காண ருசியான வெங்காய சாம்பார் தயார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்.