Latest Videos

மீந்துபோன இட்லியில் ஒரு முறை இப்படி டிபன் செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!

By Kalai SelviFirst Published Jun 25, 2024, 7:00 AM IST
Highlights

இந்த பதிவில், காலை உணவாக மசாலா இட்லி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வீட்டில் நேற்று இரவு செய்த இட்லி மீந்து போய் இருந்தால், அதை தூக்கி போடாமல் சுவையான காலை உணவு செய்து சாப்பிடுங்கள். பொதுவாகவே, நீங்கள் மீந்து போன இட்லியில் நீங்கள் உப்புமா தான் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்கள் என்றால், இன்று உங்களுக்காக ஒரு வித்தியாசமான சுவையில் ஒரு ரெசிபி கொண்டு வந்துள்ளோம். 

அது வேறு ஏதும் இல்லைங்க மசாலா இட்லி தான். இந்த இட்லி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும், செய்வது சுலபமாக இருக்கும். முக்கியமாக, இந்த மசாலா இட்லியை குழந்தைகள் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள் நீங்கள் ஒரு முறை செய்து கொடுத்தால் அடிக்கடி கேட்பார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் மசாலா இட்லி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  Suraikai Idli : சத்தான காலை உணவு சாப்பிட விரும்பினால் 'சுரைக்காய் இட்லி' செஞ்சு சாப்பிடுங்க! ரெசிபி இதோ..

மசாலா இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
மீந்துபோன இட்லி - 5
வெங்காயம் - 1( பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  Pasi Paruppu Idli : அரிசி உளுந்தம் பருப்பு தேவையில்லை.. பாசிப்பருப்பு இருக்கா?! சத்தான இட்லி ரெடி!!

செய்முறை:
மசாலா இட்லி செய்ய முதலில் எடுத்து வைத்த இட்லிகளை சின்ன சின்ன துண்டுகளாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு உப்பு தூவிக் கொள்ளுங்கள்.

வெங்காயம் நிறம் மாறியதும் அடுத்து பொடியாக நறுக்கி வைத்த பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு, இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசனை போன பிறகு அதில், பொடியாக நறுக்கி வைத்த தக்காளியும் சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் அதில், கொஞ்சமாக தண்ணீர், சுவைக்கு ஏற்ப உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விடுங்கள். இறுதியாக இட்லி துண்டுகளை அதில் சேர்த்து மசாலாக்கள் இட்லியுடன் நன்கு ஒட்டும் வரை கிளறி விடுங்கள். பின் எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை தூவி இறக்கினால் அட்டகாசமான சுவையில் மசாலா இட்லி தயார்..

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!