Pasi Paruppu Idli : அரிசி உளுந்தம் பருப்பு தேவையில்லை.. பாசிப்பருப்பு இருக்கா?! சத்தான இட்லி ரெடி!!
ஆரோக்கியமான காலை உணவாக பாசிப்பயிறு இட்லி எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி செய்ய போறீங்களா..? எப்போதும் அரிசி உளுந்து மாவில் இட்லி சாப்பிட்டு போரடிக்குதா..? அரிசி உளுந்தம் பருப்பு இல்லாமல் சூப்பராக ஒரு ஆரோக்கியமான இட்லி செய்வது எப்படி என்பதை பற்றிய பதிவுதான் இது.
ஆமாங்க உங்க வீட்ல பாசிப்பருப்பும் புளித்த தயிரும் இருக்குதா? அப்படி இருந்தால் உடனே அதில் இட்லி செஞ்சு பாருங்க சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த இட்லி செய்வதற்கு அதிகம் நேரம் எடுக்காது. ஒருமுறை இந்த இட்லியை உங்கள் வீட்டில் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு தெரியுமா.. இந்த இட்லி சர்க்கரை நோயாளிகளுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் ரொம்ப ரொம்ப நல்லது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு பாசி பயிறு ஏற்ற உணவாகும். எனவே கர்ப்பிணி பெண்கள் இந்த இட்லியை தாராளமாக சாப்பிடலாம். சரி வாங்க இப்போது இந்த பதிவில் பாசிப்பயிறு இட்லி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: Ragi Idli : ராகி இட்லியில் அப்படி என்னதான் சத்து இருக்கு; செஞ்சு சாப்பிட்டு பாருங்க அசந்துருவீங்க!!
பாசிப்பயிறு இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 250
கடுகு - 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10
உப்பு - சுவைக்கு கேட்ப
தயிர் - 150 மி.லி (நன்கு புளித்தது)
கருவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: காலை டிபனுக்கு தினையில் சுவையான சத்தான தோசை சுட்டு சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!
செய்முறை:
பாசிப்பருப்பு இட்லி செய்ய முதலில், எடுத்து வைத்த பருப்பை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, பருப்பு மூழ்கும் அளவிற்கு அதில் தண்ணீர் ஊற்றி 45 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அதை தண்ணீரில் மூன்று முறை நன்கு அலசவும். பிறகு பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு, அதில் எடுத்து வைத்த தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வைத்து அதை மூடி போட்டு சுமார் பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
மறுபுறம் ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, முந்திரி பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் பிறகு இவற்றை பாசிப்பருப்பு மாவில் சேர்த்து ஒரு முறை கலக்கி விடுங்கள். அந்த மாவில் துருவிய கேரட்டையும், கொத்தமல்லி இலையையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவுதான் இப்போது இட்லி சுடுவதற்கான மாவு தயார்.
இப்போது இட்லி சுடுவதற்கு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இந்த மாவை அதில் ஊற்றி வேக வைத்து எடுத்தால், பஞ்சு போல சத்தான பாசிப்பயிறு இட்லி ரெடி! இந்த பாசிப்பருப்பு இட்லிக்கு சைட் டிஷ் ஆக கார சட்னி வைத்து சாப்பிடலாம். அல்லது நீங்கள் விரும்பினால் சிக்கன் குழம்பு அல்லது மட்டன் குழம்பு வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D