Onion Samosa : இனி வீட்டிலும் செய்யலாம் சுவையான வெங்காய சமோசா.. ரெசிபி இதோ!

By Kalai Selvi  |  First Published Jun 22, 2024, 5:02 PM IST

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வெங்காய சமோசா வீட்டிலேயே செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


பொதுவாகவே ஈவினிங் ஸ்னாக்ஸாக நாம் பஜ்ஜி, போண்டா, வடை என போன்றவற்றை தான் சாப்பிடுவோம். அந்த லிஸ்டில் இப்போது வெங்காய சமோசாவையும் சேர்த்துக் கொள்ளலாம். சமோசா என்றால் பலருக்கு அலாதிபிரியம் என்றே சொல்லலாம். அதுமட்டுமின்றி, வெங்காய சமோசா ஒரு டேஸ்ட்டான மற்றும் ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகும். இந்த ஸ்னாக்ஸ்சை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில், மொறு மொறுபான  வெங்காய சமோசா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: 1 கப் அவல், உருளைக்கிழங்கு இருக்கா..?! 10 நிமிடத்தில் மொறு மொறு வடை செய்து சாப்பிடுங்க!

Tap to resize

Latest Videos

வெங்காய சமோசா செய்ய தேவையான பொருட்கள்: 
மைதா - 3 கப்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு...
வெங்காயம் - அரை கிலோ ((பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் -  1/4 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: டீ கடை இனிப்பு போண்டாவை இனி வீட்டிலேயெ செய்யலாம்.. அது வெறும் 10 நிமிடத்தில்.. ரெசிபி இதோ!

செய்முறை: 

  • வெங்காய சமோசா செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த மைதா உப்பு நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு ஈரமான துணியால் மூடி வைத்து சுமார் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானது, சீரகம், பொடியாக நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். 
  • வெங்காயம் பாதியளவு வெந்ததும் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள். மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அவற்றை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்து விட்டு, ஆற வைக்கவும்.
  • இப்போது பிசைந்து வைத்த மாவை சின்ன சின்ன துண்டுகளாக்கி பின் பூரி போன்று வட்டமாக தேய்த்து இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதுக்கி வைத்துள்ள மசாலாவை சிறிது அளவு வைத்து, சமோசா வடிவில் செய்து தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படியே எல்லா மாவையும் செய்ய வேண்டும்.
  • இதனை அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாக்களை ஒன்றன்பின் ஒன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்போது சுவையான வெங்காய சாம்பார் ரெடி!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!