Soya 65 : 10 நிமிடத்தில் சிக்கன் 65 சுவையில் சோயா 65.. ஒருமுறை செய்ங்க.. அடிக்கடி செய்வீங்க!

By Kalai Selvi  |  First Published Jun 22, 2024, 2:31 PM IST

இந்த பதிவில் மொறு மொறுப்பான சுவையில் சோயா 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..


பொதுவாகவே, நம்முடைய வீடுகளில் மீல்மேக்கரை வைத்து பிரியாணி, குருமா போன்ற ரெசிபிகள் தான் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால், இன்று கொஞ்சம் வித்தியாசமான முறையில் மீல்மேக்கரை வைத்து ஒரு ரெசிபி செய்யலாம். அது வேற எதுவும் இல்லைங்க சோயா 65 தான். 

சிக்கன் 65 சுவையை மிஞ்சும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும்.  முக்கியமாக குழந்தைகள் இதை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். எனவே, இதை நீங்கள் அவர்களுக்கு மாலை வேளையில் சூடாக செய்து கொடுக்கலாம். முக்கியமாக, இந்த ரெசிபி செய்வது ரொம்பவே சுலபமானது. இப்போது இந்த பதிவில் மொறு மொறுப்பான சுவையில் சோயா 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  இனி வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் செய்யலாம்.. ரெசிபி இதோ..!

சோயா 65 செய்ய தேவையான பொருட்கள்:
மீன் மேக்கர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
மைதா - 1 ஸ்பூன்
சோளமாவு - 2 ஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:   ஹோட்டல் ஸ்டைலில் டேஸ்டான எக் பிரைடு ரைஸ்.. ஒருமுறை செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க!

செய்முறை: 

  • சோயா 65 செய்ய முதலில், கொதிக்கும் நீரில் போட்டு இரண்டு நிமிடம் வேக வைக்கவும். பிறகு அதை வடிகட்டி மூன்று முறை நன்கு அலசி அதிலிருந்து நீரை எழுந்து எடுக்கவும்.
  • இதனை அடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த தயிர், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கேசரி பவுடர், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பிறகு அதில் சோயா, பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும். இப்போது இதை 30 நிமிடம் ஊற வையுங்கள். பிறகு அதில் எடுத்து வைத்த சோள மாவு மற்றும் மைதாமாவை சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளுங்கள்.
  • இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் மீல் மேக்கரை துண்டு துண்டுகளாக போட்டு பொரித்து எடுத்தால் அட்டகாசமான சுவையில் சோயா 65 ரெடி..!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!