இந்த பதிவில் கொண்டக்கடலையை வைத்து சுவையான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பொதுவாகவே, நாம் கொண்டைக்கடலையை வேகவைத்து சாப்பிடுவோம் அல்லது சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் இதில் சுவையான தோசை செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா..? ஆரோக்கியமாக இருக்க சுவைக்காக இதில் ஒரு முறை தோசை செய்து பாருங்கள்.
காலை உணவில் புரோட்டீன் எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த தோசை சிறந்த தேர்வாகும். இந்த கொண்டைக்கடலை தோசை நல்ல சுவையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் மகிழ்ச்சியுடன் சாப்பிடக் கூடிய தோசைகளில் இதுவும் ஒன்று. ஆனால், இவற்றை எப்படி செய்வது.? தேவையான பொருட்கள் என்ன ?நன்மைகள் என்ன? இதுபோன்ற விஷயங்களை இப்போது இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: 10 நிமிடத்தில் குழந்தைகளுக்குப் பிடித்த சத்தான மொறு மொறு தோசை.. ஒருமுறை செய்ங்க அடிக்கடி கேட்பாங்க..
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 1/2 கப்
ரவை - 1/2 கப்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 5
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
சீரகம் - 1/2 ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: வீட்ல கோதுமை மாவு இருக்கா? 10 நிமிடத்தில் அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான டிபன் ரெடி!
செய்முறை:
முதலில் கொண்ட கடலையை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளுங்கள் பிறகு அதை காலையில் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அரைத்த அந்த பேஸ்டில் தயிர், துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கி வைத்த பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். இதனுடைய ரவையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். இதில், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு அதை ஒரு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
இதனை அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து, அது சூடானதும் அதில் எண்ணெய் தடவி கலக்கி வைத்த மாவை அதில் ஊற்றி தோசை சுடவும். இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால், சுவையான கொண்டைக்கடலை தோசை ரெடி!! இந்த தோசைக்கு நீங்கள் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
கொண்டைக்கடலை தோசையின் நன்மைகள்:
இந்த கொண்டைக்கடலை தோசை சுவை மட்டுமின்றி, நல்ல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. ஏனெனில், கொண்டகடலையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. பசையும் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றை தாராளமாக சாப்பிடலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D