டேஸ்ட்டான கேரளா ஸ்டைல் கோழிக்கறி குழம்பு.. ரெசிபி இதோ!

By Kalai Selvi  |  First Published Jun 24, 2024, 3:27 PM IST

இந்த பதிவில் கேரளா ஸ்டைல் கேரளா ஸ்டைல் கோழிக்கறி குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.


அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு சிக்கன். சிக்கனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் மூன்று வேளையும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் உங்கள் வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான ரெசிபிகளில் சிக்கனை செய்து செய்கிறீர்களா..? அப்படியானால் ஒரு முறை கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்து பாருங்கள். இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். மேலும், இந்த சிக்கன் கிரேவி சாதா மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு சுவை அருமையாக இருக்கும் முக்கியமாக இந்த ரெசிபி செய்வது ரொம்பவே ஈஸி. சரி வாங்க இப்போது இந்த பதிவில் கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: செட்டிநாடு ஸ்டைலில் நண்டு குழம்பு.. ஒருமுறை செய்ங்க.. அடிக்கடி செய்வீங்க!

Latest Videos

undefined

கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 
மிளகு தூள் - 1 ஸ்பூன் 
மல்லித்தூள் - 2 ஸ்பூன் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் 
சீரகம் - 2 ஸ்பூன் 
சோம்பு - 1 ஸ்பூன் 
பட்டை - 1 பெரியது
ஏலக்காய் - 5
கிராம்பு -  5
வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் விழுது - 1/2 கப்
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  தெருவே மணக்கும் கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு.. ரெசிபி இதோ!

செய்முறை:
முதலில் எடுத்து வைத்த சிக்கனை தண்ணீரில் நன்றாக கழுவி, பிறகு அதில் மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து ஊற வைக்கவும். இதனை அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம் சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித்தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும் பிறகு பொடியாக நறுக்கி வைத்த தக்காளியும் இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி சேர்க்கும் போது சிறிதளவு உப்பையும் அதில் சேர்த்து கொள்ளுங்கள். தக்காளி நன்கு வதங்கியதும், அதை அடுப்பில் இருந்து இறக்கி, ஆறு வைக்கவும். பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அதே கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்த ஏலக்காய் பட்டை மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வரைக்கும் கொள்ளுங்கள். பிறகு அதில் அரைத்து வைத்த வெங்காயம் தக்காளி மசாலாவை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு உப்பையும் தூவிக் கொள்ளுங்கள். மேலும் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள் பிறகு அதை சுமார் 30 நிமிடம் வேக வைக்கவும்.

சிக்கன் நன்றாக வெந்ததும் அதில் எடுத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு 15 நிமிடம் வேக வையுங்கள். இறுதியாக, பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை அதன் மேல் தூவி இறக்கினால் கேரளா செயலில் சிக்கன் குழம்பு ரெடி! 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் உங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!