இன்னைக்கு டிபனுக்கு பூரி செய்ய போறீங்களா? ஒருமுறை 'இந்த' மாதிரி செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

By Kalai SelviFirst Published Jun 26, 2024, 7:00 AM IST
Highlights

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய காரசாரமான சுவையில் மசாலா பூரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் அடிக்கடி பூரி செய்வீங்களா...? அந்த வகையில் இன்று காலையும் உங்கள் வீட்டில் பூரி தான் செய்யப் போறீங்களா..? எப்போதும் ஒரே மாதிரியா பூரி செய்யாமல் ஒரு முறை வித்தியாசமான முறையில் மசாலா பூரி செய்து கொடுங்கள். அதுவும் குழந்தைகளுக்கு பிடித்தமான முறையில் மசாலா சேர்த்து கொடுத்தால் சந்தோஷப்படுவார்கள். மேலும் இந்த மசாலா பூரி செய்வது ரொம்பவே சுலபமானது மற்றும் சாப்பிடுவதற்கு காரசாரமாகவும் இருக்கும். சரி வாங்க.. இப்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய காரசாரமான சுவையில் மசாலா பூரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  மீந்துபோன இட்லியில் ஒரு முறை இப்படி டிபன் செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!

Latest Videos

மசாலா பூரி செய்ய தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
சூடு தண்ணீர் - 1/2 கப் 
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 ஸ்பூன்
சில்லி ஃபிளக்ஸ் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1 (மசித்தது)
கோதுமை மாவு - 1 கப் 
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  உங்க வீட்ல கொண்டக்கடலை இருக்கா?! உடனே இப்படி தோசை செய்ங்க.. எக்கச்சக்க சத்துக்கள் இருக்கு!

செய்முறை:
மசாலா பூரி செய்ய முதலில், ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைத்த ரவையை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதில் எடுத்து வைத்த சுடுதண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, அதை 10 நிமிடம் அப்படியே ஊற வைத்து கொள்ளுங்கள். ரவை நன்றாக ஊறியதும் அதில் பொடியாக நறுக்கி வைத்த பச்சை மிளகாய், சீரகம், சில்லி பிளேக்ஸ், மஞ்சள் தூள் மற்றும் வேகவைத்து எடுத்து மசித்த உருளைக்கிழங்கு, சுவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றிற்கு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த கலவையுடன் எடுத்து வைத்த கோதுமை மாவையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். முக்கியமாக, இதில் தண்ணீர் சேர்க்க வேண்டாம். மேலும், இந்த பூரி மாவை அதிக கட்டி ஆகாமல் பிசைந்து கொள்ளுங்கள்.

இப்போது கையில் என்னை தடவி கொள்ளுங்கள் பிறகு பிசைந்து வைத்த இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கோதுமை மாவில் தொட்டு பூரி வடிவில் நன்கு தேய்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படியே எல்லா உருண்டுகளையும் தேய்த்து எடுக்க வேண்டும். இதனை அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பூரி சுடுவதற்கான அளவில் எண்ணெய் ஊட்டி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் தேய்த்து வைத்த பூரி மாவை போட்டு இருபுறமும் நன்றாக வேக வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் மசாலா பூரி ரெடி..!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்...

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!