வீடு மணக்க, கை மணக்க செட்டிநாடு முட்டை குழம்பு; செஞ்சு அசத்துங்க!!

இந்த பதிவில் செட்டிநாடு முட்டை குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்..

chettinad egg kulambu recipe in tamil mks

நீங்கள் அசைவப் பிரியரா..? அப்படி இருந்தால், அசைவ சுவையில் ரெசிபி செய்து சாப்பிட நினைத்தால், செட்டிநாடு முட்டை குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டைக் குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும். இப்போது இந்தப் பதிவில் செட்டிநாடு முட்டைக் குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  மணக்க மணக்க கல்யாண வீட்டு சாம்பார்.. இனி வீட்டிலும் செய்யலாம்... ரெசிபி இதோ!

செட்டிநாடு முட்டைக் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: 
முட்டை - 5
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 
தக்காளி - 2
மல்லித் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு
வரமிளகாய் - 5
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
மிளகு - 1 ஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்

இதையும் படிங்க: திருநெல்வேலி ஸ்பெஷல் மொச்சை மசாலா இப்படி செஞ்சு பாருங்க.. சுவை டக்கரா இருக்கும்!

செய்முறை:

  • செட்டிநாடு முட்டைக் குழம்பு செய்ய முதலில், எடுத்து வைத்த முட்டையை வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு, அந்த முட்டைகளை ஆங்காங்கே கத்தியால் கீறி விடுங்கள்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வறுத்து அரைப்பதற்கு எடுத்து வைத்த சீரகம், சோம்பு போட்டு தாளிக்கவும், பின் துருவிய வைத்த ஒரு கப் தேங்காய், வர மிளகாய் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அவற்றை ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இதனை அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வேக வைத்துள்ள முட்டையைப் போட்டு லேசாக வறுத்து, அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் அதே வாணலியில் மீண்டும் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், எடுத்து வைத்த கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு, அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் ஏற்கனவே தயாரித்து வைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு அரைத்து வைத்த தக்காளியை இதில் ஊற்றி கிளறி விட்டு சுமார் இரண்டு நிமிடம் வேக வையுங்கள். பின்னர் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி விடுங்கள். எண்ணெய் பிரியும் வரை அவற்றை நன்கு வேக வைக்கவும்.
  • மசாலாவில் அடிப்பிடிக்காத படி, அதில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி கிளறி விடுங்கள். பிறகு, அரைத்து வைத்துள்ள மசாலாவை இதனுடன் சேர்த்து கிளறிவிட்டு, மூடி வைத்து, சுமார் 5 நிமிடம் வேக வைக்கவும்.
  • மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு, நன்கு வெந்ததும், வேக வைத்து எடுத்த முட்டைகளை அதில் போட்டு, ஒரு 4 நிமிடம் வேக வைக்கவும். 
  • குழம்பு ரொம்பவே, கெட்டியாக இருந்தால் அதில் உங்களுக்கு வேண்டிய அளவு தண்ணீரை ஊற்றி, குறைவான சுமார்  10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு முட்டை குழம்பு ரெடி!!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios