Latest Videos

1 கப் கோதுமை மாவு இருக்கா..?! ருசியான சுவையில் சத்தான இடியாப்பம் செய்ங்க.. ரெசிபி இதோ..

By Kalai SelviFirst Published Jun 27, 2024, 7:00 AM IST
Highlights

இந்த பதிவில் கோதுமை மாவில் இடியாப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தினமும் காலை இட்லி தோசை சாப்பிட்டு போர் அடித்து விட்டதா..? வித்தியாசமான சுவையில், அதுவும் ஆரோக்கியமான ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட விரும்புகிறீர்களா..? என்ன செய்வதென்று தெரியவில்லையா? உங்களுக்கான பதிவு தான் இது.

ஆம், உங்கள் வீட்டில் ஒரு கப் கோதுமை மாவு இருக்கா? அப்படி இருந்தால் அதில் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இடியாப்பம் செய்து சாப்பிடுங்கள். என்ன கோதுமையில் இடியாப்பமா என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?  இந்த இடியாப்பம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக இந்த இடியாப்பம் செய்வது ரொம்ப ரொம்ப சுலபமாக இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இந்த கோதுமை இடியாப்பம் ரொம்பவே நல்லது. சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் கோதுமை மாவில் இடியாப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  காலை டிபனுக்கு சத்தான இந்த மாதிரி தோசை செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க! ரெசிபி இதோ..

கோதுமை மாவு இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தேங்காய் துருவல் - 1/2 முடி
சர்க்கரை - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்

இதையும் படிங்க:  வீட்ல கோதுமை மாவு இருக்கா? 10 நிமிடத்தில் அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான டிபன் ரெடி!

செய்முறை:

  • முதலில் அடுப்பு ஒரு கடையாய் வைத்து அது சூடானதும், எடுத்து வைத்த கோதுமை மாவில் அதில் சேர்த்து, குறைந்த தீயில் வைத்து வாசனை வரும் வரை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். கோதுமை மாவு நன்கு வதங்கியதும் அதை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.
  • இதனை அடுத்து மற்றொரு பாத்திரத்தை தண்ணீர் ஊற்றி, அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
  • தண்ணீர் நன்றாக கொதித்த உடன் அதை ஏற்கனவே வறுத்து வைத்துள்ள கோதுமை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை நன்றாக கிளறி விடுங்கள். இப்போது சூடு ஆறியதும் உங்கள் கைகளைக் கொண்டு அந்த மாவை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • கோதுமை மாவை நன்றாக  பிசைந்து முடித்தவுடன் ஒரு பாத்திரத்தால் அதை மூடி, சுமார் ஐந்து நிமிடம் அப்படியே ஊற வைக்கவும்.
  • இட்லி பாத்திரத்தை தண்ணீர் நிரப்பி அதை அடுப்பில் வையுங்கள். மறுபுறம் இடியாப்ப பாத்திரத்தில் எண்ணெய் தடவி பிசைந்து வைத்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக  அதில் வைத்து இடியாப்பத்தை தட்டில் பிழிந்து வையுங்கள்.
  • இட்லி பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் நன்றாக கொதித்ததும் இப்போது, பிழிந்து வைத்த இடியாப்ப தட்டை அதற்குள் வைத்து மூடி போட்டு குறைவான தீயில் ஐந்து நிமிடம் வேக வைக்கவும். இடியாப்பம் நன்கு வெந்ததும் அதை வேறு ஒரு தட்டில் மாற்றி விடவும். அவ்வளவுதான் ருசியான சுவையில் சத்தான கோதுமை மாவு இடியாப்பம் தயார். இந்த இடியாப்பத்துடன் நீங்கள் தேங்காய் துருவல் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!