காலை டிபனுக்கு சத்தான இந்த மாதிரி தோசை செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க! ரெசிபி இதோ..
இந்த பதிவில் கருவேப்பிலை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தென்னிந்தியாவில் பொதுவாக பலரது வீடுகளில் காலை இரவு உணவாக இட்லி தோசை தான் இருக்கும். அதுவும் தோசை என்றால் பலருக்கு அலாதிப் பிரியம். குறிப்பாக, குழந்தைகள் விருப்பி சாப்பிடுவது தோசை தான். முக்கியமாக இது மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு உணவாகும். தோசையில், பல வகைகள் உள்ளன. உதாரணமாக கீரை தோசை, வெங்காய தோசை, கேரட் தோசை, மசாலா தோசை என இது போன்று பலவகைகள் உள்ளன.
அந்த வகையில் இன்று காலை உங்களது வீட்டில் தோசை செய்ய போகிறீர்கள் என்றால், கருவேப்பிலையில் தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த தோசையை நீங்கள் இதுவரை சாப்பிடவில்லை என்றால் கண்டிப்பாக ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவை சற்று வித்தியாசமாகவும் சாப்பிடுவதற்கு அருமையாகவும் இருக்கும் முக்கியமாக இந்த தோசை செய்வது ரொம்பவே ஈஸி. அது மட்டுமின்றி, இந்த தோசை ஆரோக்கியமானதும் கூட.
நம்மில் பெரும்பாலானவர் கருவேப்பிலையை விரும்பி சாப்பிடுவதில்லை. எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு அதன் நன்மைகள் முழுமையாக கிடைக்க இந்த தோசை சுட்டுக் கொடுங்கள். மேலும் கருவேப்பிலை முடி வளர்வதற்கு பெரிதும் உதவும். எனவே, கருவேப்பிலை சாப்பிட விரும்பாதவர்கள் கருவேப்பிலையை இந்த வழியில் சாப்பிடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த தோசையை விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் கருவேப்பிலை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: வீட்ல கோதுமை மாவு இருக்கா? 10 நிமிடத்தில் அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான டிபன் ரெடி!
கருவேப்பிலை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1 1/2 கப்
பச்சரிசி - 1/2 கப்
உளுந்தம் பருப்பு - 3/4 கப்
கருவேப்பிலை - 2 கப்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4
சீரகம் - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 5
சின்ன வெங்காயம் - 4
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: Ven Pongal : ஒருமுறை வெண்பொங்கல் இந்த மாதிரி செய்ங்க.. சுவை வேற லெவல் இருக்கும்!
செய்முறை:
- கருவேப்பிலை தோசை செய்ய முதலில் எடுத்து வைத்த உளுத்தம் பருப்பு, இட்லி அரிசி, பச்சரிசி ஆகியவற்றை தண்ணீரில் நன்கு கழுவுங்கள். பிறகு அவற்றை தண்ணீரில் சுமார் 4 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- இதனை அடுத்து ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை வெங்காயம் வர மிளகாய் சீரகம் இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். அவை நன்கு வதங்கியதும் அவற்றை ஆற வைத்து, பின் அதை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
- இப்போது இந்த மசாலாவை தயாரித்து வைத்த மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் தோசை சுடுவதற்கான மாவு தயார்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி கலைத்து வைத்த மாவை இதில் ஊற்றி இருபுறமும் நன்கு வேக வைத்து எடுத்தால், சுவையான ருசியில் ஆரோக்கியமான கருவேப்பிலை தோசை ரெடி! இந்த தோசையுடன் நீங்கள் தேங்காய் சட்னி அல்லது உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை வைத்து சாப்பிடலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D