மைக்ரோசாஃப்ட் வேர்டைடு போல இருக்கும் இந்த மால்வேர் குரோம் போன்ற பிரவுசர்ங்களில் ஃபோனி அப்டேட் போல பரவி வருகிறது. இந்தத் தீங்கு விளைவிக்கும் கோப்புகளின் தொகுப்பைப் டவுன்லோட் செய்யும் பயனர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறது.
கவனமாக இல்லாத பயனர்களிடம் துஷ்பிரயோகத்தில் ஈடுபட ஹேக்கர்கள் புதிய உத்திகளைக் கண்டுபிடித்து வருகிறார்கள். உயர்தரத்தில் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் கூட மால்வேர்களுக்குப் பலியாகின்றனர்.
அந்த வகையில் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் குரோம் போன்று தோற்றமளிக்கும் புதிய மற்றும் அதிநவீன மால்வேர் பரப்பப்பட்டு வருகிறது. மைக்ரோசாஃப்ட் சாதனங்களை பயன்படுத்துபவர்களிடம் இருந்து பணத்தை பறிப்பதற்காக இந்த மால்வேர் உருவாக்கப்பட்டுள்ளது என சைபர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான ப்ரூஃப்பாயிண்ட் மார்ச் மாதத்திலிருந்து இது குறித்து எச்சரித்து வருகிறது. "சைபர் கிரிமினல் புதிய, மாறுபட்ட வழிகளைப் பின்பற்றுகிறார்கள்" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இப்போது தீங்கிழைக்கும் மால்வேர்கள் மேலும் பரவுவதை ப்ரூஃப்பாயிண்ட் கண்டுபிடித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் வேர்டைடு போல இருக்கும் இந்த மால்வேர் குரோம் போன்ற பிரவுசர்ங்களில் ஃபோனி அப்டேட் போல பரவி வருகிறது. இந்தத் தீங்கு விளைவிக்கும் கோப்புகளின் தொகுப்பைப் டவுன்லோட் செய்யும் பயனர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறது.
ட்ரோஜன் ஹார்ஸ்-எஸ்க்யூ தாக்குதல் கிரிப்டோகரன்ஸிகள், முக்கியமான கோப்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் களவு போகும் வாய்ப்பை உருவாக்குகிறது என்றும் ப்ரூஃப்பாயிண்ட் நிறுவனம் எச்சரிக்கிறது.
ப்ரூஃப்பாயிண்ட் நிறுவனம் ஏப்ரல் மாதம் ClearFake குறித்த எச்சரித்திருந்தனர். போலியான பிரவுசர் அப்டேட் வடிவில் ClearFake மால்வேர் இணையதளங்களில் தவறான HTML மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட்களுக்கு இடம் அளிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சைபர் கிரிமினல்கள் போலியான குரோம் பிரவுசர் அப்டேட்களை உருவாக்கி பவர்ஷெல் மூலம் தீங்கிழைக்கும் மென்பொருளை இயங்க வைக்க முயற்சி செய்கிறா்கள். இந்தத் தீங்கிழைக்கும் மென்பொருள் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை சைபர் கிரிமினல்கள் கையாளும் வசதியைப் பெற வழிவகுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஈமெயிலில் தீங்கிழைக்கும் HTML கோப்புகளை அனுப்பியும் இதேபோன்ற ஹேக்கிங்கில் ஈடுபடுகிறார்கள்.