எதிர்காலத்தில் மொபைல் ஃபோனே இருக்காது; எல்லாமே எங்க நியூராலிங்க் தான்: எலான் மஸ்க் கருத்து

By SG BalanFirst Published Jun 18, 2024, 3:39 PM IST
Highlights

அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 100 நாட்களை நிறைவு செய்த நிலையில், நியூராலிங்க் தனது பிளாக் பதிவு ஒன்றில் நோலண்ட் அர்பாக்கின் உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி விரிவான அறிக்கையைப் பகிர்ந்துள்ளது. நோலண்ட் அர்பாகின் உடல்நிலை குறித்து எலான் மஸ்க்கும் பல்வேறு ட்வீட்களைப் பகிர்ந்துள்ளார்

எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில் முதன்முறையாக ஒரு மனிதனுக்கு மூளையில் சிப்பை வெற்றிகரமாக பொருத்தியுள்ளது.

இந்த மூளைச் சிப்பைப் பொருத்திக்கொண்டிருப்பவர் 29 வயதான நோலண்ட் அர்பாக். ஒரு விபத்துக்குப் பிறகு அவரது உடல் தோள்களுக்குக் கீழே செயலிழந்துவிட்டது. அவருக்கு ஜனவரி 28ஆம் தேதி மூளையில் நியூராலிங்க் சிப் பொருத்தப்பட்டது. இரண்டு நாள் அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Latest Videos

அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 100 நாட்களை நிறைவு செய்த நிலையில், நியூராலிங்க் தனது பிளாக் பதிவு ஒன்றில் நோலண்ட் அர்பாக்கின் உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி விரிவான அறிக்கையைப் பகிர்ந்துள்ளது. நோலண்ட் அர்பாகின் உடல்நிலை குறித்து எலான் மஸ்க்கும் பல்வேறு ட்வீட்களைப் பகிர்ந்துள்ளார்.

மொபைல் பிரைவசி இல்லையா... செல்போன் செயலிகளை ரகசியமாக பயன்படுத்த நிறைய வழி இருக்கு!

இந்நிலையில், இப்போது ​​நியூராலிங்க் பற்றிக் கூறியுள்ள எலான் மஸ்க், எதிர்காலத்தில் எந்த தொலைபேசிகளும் இருக்காது; நியூராலிங்க் தான் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.

ட்விட்டரில் தன்னைப் பற்றிய கேலியான பதிவுகளை வெளியிடும் Not Elon Musk என்ற கணக்கில் வெளியான ஒரு பதிவுக்கு பதிலளித்த ​​மஸ்க், "எதிர்காலத்தில், தொலைபேசிகள் இருக்காது, வெறும் நியூராலிங்க்ஸ் மட்டுமே இருக்கும்" என்று கூறியுள்ளார்.

Not Elon Musk வெளியிட்ட பதிவில், எலான் மஸ்க் தலையில் பொறுத்தப்பட்ட சிப்களுடன் மொபைல் போன் ஒன்றை பார்த்துக்கொண்டிருப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், "சிந்திப்பதன் மூலமே உங்கள் புதிய எக்ஸ் ஃபோனைக் கட்டுப்படுத்த, உங்கள் மூளையில் நியூராலிங்க் சிப்பை நிறுவிக்கொள்வீர்களா?" என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நியூராலிங்க் தனது ஆய்வில் பங்கெடுக்க தயாராக இருக்கும் இரண்டாவது நபரைத் தேடுகிறது. தேர்வுசெய்யப்படும் நபர் மூளையில் நியூராலிங்க் சிப்பைப் பொருத்திக்கொள்ளலாம். தங்கள் கணினியையும் தொலைபேசியையும் தங்கள் மனத்தினால் கட்டுப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! மட்டையடியாகத் தாக்கும் ராஜீவ் சந்திரசேகர்!

click me!