vuukle one pixel image

Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்

Velmurugan s  | Published: Jun 20, 2024, 2:47 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் மணி விழுந்தான் ராமசேசபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அதிகமாக விற்பனையாகி வருகிறது. 

தலைவாசல் மணிவிழுந்தான் பகுதியில் கள்ளச்சாராயத்தினை இருசக்கர வாகனத்தில் பால்பாக்கெட் போல பாக்கெட் செய்து குடிமகன்கள் இருக்கும் இடத்திற்கே வந்து டோர் டெலிவரி செய்து விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த பகுதியில் தொடர்ந்து கலாச்சாராயம் விற்பது வாடிக்கையாகி உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.