இந்த பதிவில் அவல் உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மாலை வேளையில் சூடானடியுடன் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று விரும்புவோம். அதுவும் காரமான ருசியான ஒரு ஸ்நாக்ஸ். அப்படி நீங்கள் விரும்பினால் உங்களுக்கான ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் இந்த பதிவில் கொண்டு வந்துள்ளோம்.
உங்க வீட்ல அவலும், உருளைக்கிழங்கும் இருந்தால் வடை செய்து சாப்பிடுங்கள். இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த ஸ்நாக்ஸ் செய்ய அதிக நேரம் எடுக்காது. இந்த அவல் உருளைக்கிழங்கு வடையை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் சரி வாங்க.. இப்போது அவல் உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: உருளைக்கிழங்கில் சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. இப்படி செஞ்சு அசத்துங்க.. ரெசிபி இதோ!
அவல் உருளைக்கிழங்கு வடை செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை அவல் - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 3 (பொடியாக நறுக்கியது)
அரிசி மாவு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: ஈவினிங் ஸ்நாக்ஸாக சூடாகவும் சுவையாகவும் 'ஜவ்வரிசி வடை' செஞ்சி சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!
செய்முறை:
அவல் உருளைக்கிழங்கு வடை செய்ய முதலில், எடுத்து வைத்த அவளை நன்றாக தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள். பிறகு உருளைக்கிழங்கை வேகவைத்து அதன் தோலை உரித்து நான்காக மசித்து கொள்ளுங்கள். இப்போது கழிவு வைத்த அவலை இந்த மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். பின் அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
இதனை அடுத்து இதில் மஞ்சள் தூள், சீரகத்தூள், அரிசி மாவு தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் வடை சுடுவதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்த மாவை வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் காரசாரமான சுவையில் அவல் உருளைக்கிழங்கு வடை ரெடி!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D