Latest Videos

ஹோட்டல் ஸ்டைலில் டேஸ்டான எக் பிரைடு ரைஸ்.. ஒருமுறை செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க!

By Kalai SelviFirst Published Jun 20, 2024, 2:43 PM IST
Highlights

ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே சுவையான எக் பிரைடு ரைஸ் செய்வதற்கான ரெசிபி இங்கே..

பிரைடு ரைஸ் ரைஸ் என்றாலே குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் பல பெற்றோர்கள் அதை ஹோட்டலில் வாங்கி கொடுக்கிறார்கள். அதற்கு பதிலாக, நீங்கள் வீட்டிலேயே எளிமையாக பிரைடு ரைஸ் செய்து கொடுங்கள். அது எப்படி செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லையா? உங்களுக்கான பதிவு தான் இது. சரி வாங்க... இப்போது இந்த பதிவில், ஹோட்டல் ஸ்டைலில் எக் பிரைடு ரைஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்..

இதையும் படிங்க:  குடைமிளகாயில் ஒருடைம் இப்படி சாதம் செய்யுங்க.. செம ருசியாக இருக்கும்!

ஹோட்டல் ஸ்டைலில் எக் பிரைடு ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
முட்டை - 5
உப்பு - சுவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் - சிறிதளவு
கான்பிளவர் மாவு - 2 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - சிறிதளவு
கரம் மசாலா - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1 (நீள்வாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 10 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 (துருவியது)
முட்டைகோஸ் - 50 கி (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1(நீள்வாக்கில் நறுக்கியது)
மிளகு தூள் - சிறிதளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க: குக்கரில் குழையாமல் டேஸ்ட்டான காளான் பிரியாணி... 10 நிமிடத்தில் செய்திடலாம்..!

செய்முறை:
ஹோட்டல் ஸ்டைலில் எக் பிரைடு ரைஸ் செய்ய முதலில், எடுத்து வைத்த முட்டையை ஒரு பவுலில் உடைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பவுலில் எண்ணெய் தடவி கலைக்கு வைத்த முட்டையை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த பவுலை இட்லி சட்டி அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை ஆற வையுங்கள்.

வேகவைத்து எடுத்த முட்டை நன்றாக ஆரிய பிறகு அதை உங்களுக்கு எந்த வடிவில் வேண்டுமோ அதுபோல கட் செய்து கொள்ளுங்கள். பிறகு, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த கான்பிளார் மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு திக்காக கலந்து கொள்ளுங்கள். பிறகு இந்த கலவையுடன் ஏற்கனவே, நறுக்கி வைத்த முட்டையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். 

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் முட்டையை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக சிவந்து வந்தவுடன் எடுக்கவும். இதனை அடுத்து அடுப்பில் மற்றொரு கடையை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் நீள்வாக்கில் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இதனை அடுத்து பொடியாக நறுக்கி வைத்த பூண்டு மற்றும் இஞ்சியையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

சிறிது நேரம் கழித்து பொடியாக நறுக்கி வைத்த முட்டை கோஸ் மற்றும் கேரட்டையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு குடைமிளகாயையும் இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இப்போது இதில், ரெண்டு முட்டையை உடைத்து நன்றாக கிளறி விடுங்கள். இதனுடன் மிளகுத்தூளையும் சேர்க்கவும். இவை அனைத்தும் நன்றாக மிக்ஸ் ஆனதும், அதில் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

பிறகு ஏற்கனவே வேக வைத்து எடுத்த பாஸ்மதியையும் இதனுடன் சேர்த்து இப்போது பொரித்து வைத்த முட்டையையும் இதனுடன் சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை சாதத்தின் மேல் தூவி இறக்கினால் டேஸ்டான எக் பிரைடு ரைஸ் ரெடி!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!