Latest Videos

வீட்ல கோதுமை மாவு இருக்கா? 10 நிமிடத்தில் அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான டிபன் ரெடி!

By Kalai SelviFirst Published Jun 20, 2024, 7:30 AM IST
Highlights

இந்த பதிவில் கோதுமை மாவில் மசாலா தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

காலை உங்கள் வீட்டில் தோசை சுட போறீங்களா..? எப்பவும் அரிசி மாவு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா..? அப்படியானால் உங்கள் வீட்டில் கோதுமை மாவு இருந்தால் மசாலா தோசை சுட்டு சாப்பிடுங்கள்.

கோதுமை மாவு மசாலா தோசை எப்போதும் செய்யும் தோசையை போல தான் இருக்கும் ஆனால் அத்துடன் சில பொருட்களை வதக்கி சேர்க்க வேண்டும் அவ்வளவுதான். இந்த கோதுமை மாவு மசாலா தோசைசற்று வித்தியாசமான சுவையில், சாப்பிடுவதற்கு ரொம்ப அருமையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த தோசை செய்வது ரொம்பவே ஈஸி. ஒரு முறை இந்த தோசை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். அடிக்கடி கேட்பார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் கோதுமை மாவில் மசாலா தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  சத்தான காலை உணவு சாப்பிட விரும்பினால் ராகி புட்டு செய்ங்க.. ரெசிபி இதோ!

கோதுமை மாவில் மசாலா தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு

மசாலா செய்வதற்கு...
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுகிறது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப

இதையும் படிங்க: குழந்தைகளுக்குப் பிடித்த பூரி! ரவையில் ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!

செய்முறை:
கோதுமை மாவில் மசாலா தோசை செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். முக்கியமாக, கட்டிகள் இல்லாமல்.  இப்போது இந்த மாவை மூடி வைத்து சுமார் ஐந்து நிமிடம் ஊற வையுங்கள்.

இதனை அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊத்தி சூடானதும், எடுத்து வைத்த கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு கடலைப்பருப்பையும் அதில் சேர்க்கவும். இதனை அடுத்து பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் அவற்றை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். இந்த மசாலா பொருட்கள் நன்கு ஆறியதும், அதை கழக்கி வைத்துள்ள கோதுமை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது தோசை சுடுவதற்காக தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவி கலைக்க வைத்துள்ள தோசை மாவை இதில் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால், அட்டகாசமான சுவையில் கோதுமை மாவு மசாலா தோசை ரெடி!

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!