கோவை ஸ்டைல் சிக்கன் மிளகு குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கோவை ஸ்டைல் சிக்கன் மிளகு குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் : ½ கிலோ
மிளகு : 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது : 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் : கால் டீஸ்பூன்
மல்லி தூள் : 1 ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
வெங்காயம் : 1
வெண்னெய் : 100 கிராம்
கொத்தமல்லி : சிறிதளவு
உப்பு : தேவையான அளவு
நாவில் எச்சில் ஊறவைக்கும் கிரீன் சிக்கன் கிரேவி.. ரெசிபி இதோ!
சிக்கன் மிளகு குழம்பு எப்படி செய்வது?
முதலில் நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து பிசைந்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் மிளகை பொடி செய்து சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது சிக்கனை ஒரு கடாயில் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். சிக்கன் வெந்து கொண்டிருக்கும் போதே கலந்து வைத்துள்ள மசாலா, உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கறிக்குழம்பே தோத்துப் போயிடும்.. டேஸ்ட்டியான பலாக்கொட்டை குழம்பு.. ஈஸியா செய்யலாம்..
மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி, நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும், பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் அதனை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும். கடைசியாக சிறிது மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான சிக்கன் மிளகு குழம்பு ரெடி. சூடான சாதம் அல்லது சப்பாத்திக்கூட இந்த குழம்பு சுவையாக இருக்கும்.