கறிக்குழம்பே தோத்துப் போயிடும்.. டேஸ்ட்டியான பலாக்கொட்டை குழம்பு.. ஈஸியா செய்யலாம்..

By Asianet Tamil  |  First Published Jun 5, 2024, 7:06 PM IST

சுவையான பலாக்கொட்டை குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


சுவையான பலாக்கொட்டை குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 
பலாக்கொட்டை : 10
புளி : சிறிதளவு
சாம்பார் பொடி : ஒன்றரை டீஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
பெருங்காயம் : 1 சிட்டிகை
அரிசி மாவு : 1 டீஸ்பூன்
எண்ணெய் : தேவையான அளவு
கடுகு, வெந்தயம் : தாளிக்க 
ஓமம் : சிறிதளவு
கறிவேப்பிலை : சிறிதளவு

Tap to resize

Latest Videos

ஒருமுறை முட்டை பெப்பர் கிரேவி இப்படி செய்ங்க.. சூப்பரா இருக்கும்! இந்த டேஸ்ட்ட மறக்கவும் மாட்டீங்க..

பலாக்கொட்டை குழம்பு எப்படி செய்வது?

முதலில் கடாயில் பலாக்கொட்டைகளை சேர்த்து வறுக்கவும். பின்னர் அவற்றை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். ஆறியவுடன் பலாக்கொட்டையின் தோலை அகற்றவும். பின்னர் பலாப்பழ கொட்டைகளை ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் சேர்ந்து 2 – 3 விசில் வைத்து வேக விடவும். 

நாவில் எச்சில் ஊறவைக்கும் கிரீன் சிக்கன் கிரேவி.. ரெசிபி இதோ!

இப்போது ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து, கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும், பின்னர் அதில் பெருங்காயம் சேர்த்து, சாம்பார் தூள் சேர்த்து கிளறவும். புளி கரைசல் சேர்த்த பின், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை 5 நிமிடங்களுக்கு அதை கொதிக்க விடவும். பின்னர் வேகவைத்த பலாக்கொட்டைகளை சேர்த்து கொதிக்க வைத்தால் போதும். சுவையான பலாக்கொட்டை குழம்பு தயார். சூடான சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். 

click me!