Curd Rice Sidedish : தயிர் சாதத்திற்கு ஏற்ற 5 பெஸ்ட் சைட் டிஷ்.. ஈஸியா செய்யலாம்.. ட்ரை பண்ணி பாருங்க..

By Asianet TamilFirst Published Apr 6, 2024, 1:31 PM IST
Highlights

தயிர் சாதத்திற்கு ஏற்ற சிறந்த சைட் டிஷ் குறித்தும், அவற்றின் செய்முறை குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் ஆண்டு முழுக்க வெப்பம் இருக்கும் நிலையில் தயிர் சாதம் என்பது ஆரோக்கியம் நிறைந்த சிறந்த உணவாக கருதப்படுகிறது. உடல் வெப்பத்தை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் இந்த தயிர் சாதம் உதவுகிறது, மேலும் தயிரில் கால்சியம் இரும்பு, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் புரதங்களும் உள்ளதால் இந்த தயிர் சாதம் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கிறது. வெயில் சுட்டெரித்து வரும் இந்த கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவாகவும் தயிர் சாதம் உள்ளது. இந்த தயிர் சாதத்திற்கு ஏற்ற சிறந்த சைட் டிஷ் குறித்தும், அவற்றின் செய்முறை குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு வறுவல்

தயிர் சாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது உருளைக்கிழங்கு வறுவல் தான். இதை மிக எளிதாக எப்படி செய்வது? முதலில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, மஞ்சள் தூள், மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும். பின்னர் அதில் நாலைந்து பூண்டு பற்களை தட்டி சேர்க்கவு. பின்பு கிளறிவிட்டு, உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும். பின்பு மீண்டு மூடி போட்டு வேக வைக்கவும். கடைசியாக அதில் சிறிதளவு சோம்பு தூள் சேர்த்து கிளறினால் தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி..

Banana For Diabetes : சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய் :

ஒரு மாங்காயை சிறிது சிறிதாக நறுக்கி, அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி 10 நிமிடங்களுக்கு ஊறவிடவும். பின்பு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தையம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் அதில் ஊற வைத்த மாங்காயை சேர்த்து கிளறவும். 1- 2 நிமிடம் வேகவைத்தாலே போதும் சுவையான இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய் ரெடி..

வெங்காயம் ஃப்ரை:

வெங்காய ஃப்ரை செய்ய, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் 15 -20 சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி சேர்த்து, 2 பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். அவ்வளவு தான் தயிர் சாதத்துடன் தொட்டு சாப்பிட ஈஸியான டேஸ்டியான வெங்காய ஃப்ரை ரெடி..

எண்ணெய் கத்திரிக்காய்:

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, ஜீரகம் சேர்த்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். ¬பின்னர் அதில் நறுக்கி வைத்த கத்திரிக்காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விடவும். கத்திரிக்காய் வெந்த பிறகு அதில் மிளகாய் தூள், சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும், 5 நிமிடம் மிதமான தீயில் வேகவைத்து இறக்கினால் அட்டகாசமான எண்ணெய் கத்திரிக்காய் ஃப்ரை ரெடி..

Summer Drinks : கோடையில் குளு குளுனு இருக்க இனி கூல் டிரிங்க்ஸ் குடிக்காதீங்க.. "இத' மட்டும் குடிச்சா போதும்!

தக்காளி தொக்கு :

தக்காளி தொக்கு செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கி வைத்த 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து, நறுக்கி வைத்த 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய உடன் 3 பழுத்த தக்காளி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கிய உடன் அதில் சிறதளவு மஞ்சள், உங்கள் காரத்துக்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான தக்காளி தொக்கு ரெடி. 

click me!