'காலாவதி' மற்றும் ‘இந்த தேதிக்கு முன்பு பயன்படுத்துவது சிறந்தது’ இவை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
'காலாவதி' மற்றும் ‘இந்த தேதிக்கு முன்பு பயன்படுத்துவது சிறந்தது’ இவை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உங்கள் உணவு லேபிள்களை சரியாகப் படிக்க, இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமான (Food Safety & Standards Authority of India - FSSAI) வழங்கும் எளிய வழிகாட்டி இதோ.
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பொதுவாக லேபிள்களில் அச்சிடப்பட்ட 'காலாவதி' (expiry' date) மற்றும் ‘இந்த தேதிக்கு முன்பு பயன்படுத்துவது சிறந்தது’ (best before) தேதியுடன் வருகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், best before' தேதியை கடந்த உணவுப் பொட்டலங்கள் தூக்கி எறியப்படுகின்றன. அதே போல், காலாவதி தேதியை கடந்த உணவுப் பொருட்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படுகின்றன.
அதிகளவு பால் குடிப்பீங்களா? அப்ப இந்த மோசமான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.. கவனம்..
ஆனால் இந்த இரண்டு தேதிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பரிந்துரைக்கப்பட்ட தேதிக்கு அப்பால் உணவின் தரம், சுவை அல்லது மிருதுவான தன்மை ஒரே மாதிரியாக இருக்காது. மேலும் காலாவதி தேதி கடந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்த பாதுகாப்பானது அல்ல என்று குறிப்பிடுகிறது.
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை பொறுத்தவரை, அவற்றில் உள்ள பொருட்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட தேதியில் அவை பாதுகாப்பானதா இல்லையா என்பதை தீர்மானிக்க லேபிள்களைப் படிப்பது மிகவும் முக்கியமானது. சில உணவுகளில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பாக்டீரியா வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே காலாவதி தேதி, அவை பயன்படுத்த பாதுகாப்பானவை அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள உதவுகிறது.
"உணவுப் பொருட்களை வாங்கும் போது, எப்போதும் உற்பத்தித் தேதியை சரிபார்க்கவும், பயன்பாட்டிற்கு முன் சிறந்தது மற்றும் காலாவதியாகும் தேதி. உற்பத்தி தேதி உங்களுக்கு உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் தேதியைக் கூறுகிறது. best before தேதியானது உணவு உட்கொள்ளும் சரியான வடிவத்தில் இருக்கும் தேதியைக் குறிக்கிறது என்று FSSAI தெரிவித்துள்ளது.
Ensure reading labels before purchasing of any packaged food. Must watch this video to understand The difference between Expiry date and Best before date. pic.twitter.com/qpnuvhHC9g
— FSSAI (@fssaiindia)
அதாவது, குறிப்பிட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு 10 ஏப்ரல் 2024 அன்று பேக் செய்யப்பட்டு, அதற்கு best before தேதி 3 மாதங்கள் என்றால், தரம், சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருப்பதை உறுதிசெய்ய, இந்த உணவை ஜூலை 10, 2024க்குள் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், best before' தேதிக்கு பிறகு, உணவுப் பொருள் சுவை, புத்துணர்ச்சி, நறுமணம் அல்லது ஊட்டச்சத்துக்களை இழக்கக்கூடும். எனினும் அந்த உணவு பாதுகாப்பாக இருக்காது என்று அர்த்தமல்ல என்று FSSAI தெளிவுப்படுத்தி உள்ளது.
மறுபுறம் காலாவதி தேதியானது, உணவு உட்கொள்வதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கும் தேதியைக் குறிக்கிறது. best before' தேதிக்கு பின்பும், உணவை உட்கொள்ளலாம் என்றாலும், காலாவதி தேதிக்கு பின் உணவை உட்கொண்டால் அது உங்கள் உடல்நலத்திற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இந்த 3 உணவுகளை சிக்கனுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. விஷத்தற்கு சமம்!
காலாவதி தேதி ஜூன் 30 2020 எனில், இந்தத் தேதிக்குப் பிறகு உணவுப் பொருளைப் பயன்படுத்துவது பாதுகாப்பற்றது, மேலும் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று FSSAI தெரிவித்துள்ளது, எனவே காலாவதியான தேதி கடந்த உணவை ஒருபோதும் உட்கொள்ள வேண்டாம், ஏனெனில் அது பாதுகாப்பற்றதாக இருக்கலாம். அவற்றை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.