குழந்தைகளுக்குப் பிடித்த பூரி! ரவையில் ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!

இந்த பதிவில் ரவையைக் கொண்டு பூரி எப்படி செய்வது என்பதையும், அதற்கான உருளைக்கிழங்கு குருமாவையும் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

breakfast recipes easy and tasty rava poori recipe in tamil mks

தினமும் காலை உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்து உங்களுக்கு குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா? குழந்தைகள் அதை சாப்பிட மறுத்தால் அவர்களுக்கு பிடித்த உணவான பூரி செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், பூரி செய்வதற்கு கோதுமை மாவும் மற்றும் மைதா மாவு இல்லை என்று யோசிக்கிறீர்களா..? ஆனால் இந்த இரண்டு மாதம் இல்லாமல் பூரி மொறு மொறுவென்று செய்யலாம் தெரியுமா..? 

ஆம் உங்கள் வீட்டில் ரவை இருந்தால் போதும், அருமையான சுவையில் பூரி தயார். இதற்கு சைடு டிஷ் ஆக உருளைக்கிழங்கு குருமா சூப்பராக இருக்கும். இந்த மொறு மொறு ரவை பூரி உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக, இந்த ரவை பூரி செய்வதற்கு உங்களுக்கு சில நிமிடங்களை ஆகும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் ரவையைக் கொண்டு பூரி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி பூண்டு சட்னி கொடுங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்!

ரவையில் பூரி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
வறுக்காத ரவை - 1/4 கிலோ
உப்பு - சுவைக்கேற்ப 
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க: பருப்பு இல்லாமல் மணக்க மணக்க இட்லி சாம்பார் இப்படி செய்ங்க.. சுவை வேற லெவல்ல இருக்கும்!

செய்முறை:
ரவை பூரி செய்வதற்கு முதலில் எடுத்து வைத்த ரவையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த ரவையை போட்டு அதில் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கிளறி விடுங்கள். இப்போது அதில்  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு மூடியால் மூடி வைத்து பத்து நிமிடம் ஊற வையுங்கள். 

பத்து நிமிடம் கழித்து பிசைந்த மாவை  மீண்டும் ஒருமுறை பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக அதை உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின் அந்த உருண்டையில் ஒன்றை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து பூரி அளவிற்கு தேய்த்து எடுக்கவும். இப்படியே எல்லா மாவையும் தேய்த்து எடுக்கவும். 

பின் ஒரு கடையை அடுப்பில் வைத்து பூரி பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் தேய்த்து வைத்துள்ள மாவை ஒவ்வொன்றாக சுட்டு எடுங்கள். அவ்வளவு தான் சுவையான மொறு மொறுப்பான ரவா பூரி ரெடி!!

இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு முறை உங்களது வீட்டில் செய்து பார்த்து சுவை எப்படி இருந்தது என்று எங்களுக்கு அனுப்புங்கள்...

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios