Summer Hair Care Tips : கோடையில் அதிகமாக முடி கொட்டுதா..? உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ் இதோ!

First Published Apr 9, 2024, 5:02 PM IST

கோடையில் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். நிச்சயமாக நல்ல பலன்கள் கிடைக்கும்.

தற்போது கோடை காலம் நடந்துகொண்டிருக்கிறது. இதில் அனைவரும் கொளுத்தும் வெயில் மற்றும் வலுவான தூசி புயல்களால் சிரமப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி, இந்த சூரிய ஒளியால் தோல் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன. உதாரணமாக, வியர்க்குரு, சொறி போன்றவை. 

இதனுடன், வியர்வை காரணமாக, முடி மிக வேகமாக வியர்க்க ஆரம்பத்துவிடும். இதனால் முடி உதிர்தல் பிரச்சனையை பலர் சந்திப்பர். முடி உதிர்வதைத் தடுக்க மக்கள் விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவார்கள். ஆனால், அதன் விளைவு நீண்ட காலம் நீடிக்காது.

இத்தகைய சூழ்நிலையில், கோடையில் கூந்தலை வலுப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் முடி உதிர்வதை தடுக்கலாம். மேலும் இவற்றிற்காக நீங்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. எனவே தாமதமின்றி, இந்த வீட்டு வைத்தியங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

கற்றாழை: கோடைக்காலத்தில் கற்றாழையைப் பயன்படுத்துவது சருமத்திற்கு எவ்வளவு நன்மையோ அதே அளவு முடிக்கும் நன்மை பயக்கும் தெரியுமா..கற்றாழையை தலைமுடியில் தடவி வந்தால், அதில் உள்ள சத்துக்கள் உங்கள் தலைமுடியை பட்டுப் போல மென்மையாக மாற்றும். அதுமட்டுமின்றி, முடி உதிர்வதையும் குறைக்கும். அதற்கு, கற்றாழை ஜெல்லை முடியில் 30 நிமிடங்கள் தடவி, பிறகு குளிக்கவும். நீங்கள் விரும்பினால், தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவலாம்.

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு எவ்வளவு நன்மை தருகிறதோ, அதுபோலவே, கோடையில் இதன் பயன்பாடு கூந்தலுக்கு நன்மை பயக்கும். எனவே, தேங்காய் எண்ணெயைக் கொண்டு உங்கள் தலைமுடியில் நன்கு தேய்த்து, உச்சந்தலையில் மசாஜ் செய்தால், அது உங்கள் முடியை வலுப்படுத்தும்.

இதையும் படிங்க: Summer Hair Care Tips : கோடைகால தலைமுடியை பராமரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!!

வெந்தயம்: நிங்கள் முடி உதிர்தல் பிரச்சனையால் போராடிக் கொண்டிருந்தால், வெந்தயத்தை ஒரே இரவில் ஊற வைத்து, பின் அடுத்த நாள், அவற்றை அரைத்து பேஸ்ட் செய்து, அந்த பேஸ்ட்டை தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதனால் நீங்கள் அளப்பரிய பலன்களை பெறுவீர்கள்.

இதையும் படிங்க: வெயில் காலத்தில் குழந்தைகளின் தலைமுடியை பராமரிக்க தரமான 5 டிப்ஸ்!!

முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய்: முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய்யின் கலவையானது முடிக்கு பெரிதும் நன்மை பயக்கும். இந்த கலவையை செய்ய, ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து, அதில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இப்போது அதை உங்கள் தலைமுடியில் 30 நிமிடங்கள் தடவி அப்படியே விடவும். பிறகு குளிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் கூந்த ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!