தங்கம், வெள்ளி, வைரம் மட்டும் 66 கிலோ இருக்காம்; வெளிவந்த கங்கனாவின் சொத்து மதிப்பு விவரம் - ஷாக் ஆகாம படிங்க

First Published | May 15, 2024, 9:36 AM IST

பாலிவுட் நடிகையும், அரசியல்வாதியுமான நடிகை கங்கனா ரணாவத்தின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

Kangana Ranaut

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பாலிவுட்டில் பிசியானதால் கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் இருந்த கங்கனாவை கடந்த 2021-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த தலைவி படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அப்படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார் கங்கனா. இதையடுத்து கடந்தாண்டு வெளிவந்த சந்திரமுகி படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்தார்.

BJP candidate Kangana Ranaut

அப்படத்துக்கு பின்னர் அரசியலில் பிசியான கங்கனா, தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கனா ரணாவத் களமிறக்கப்பட்டு இருக்கிறார். அங்கு போட்டியிடுவதற்காக நேற்று கங்கனா ரணாவத் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தன்னுடைய சொத்து விவரங்களையும் கங்கனா அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்... Suchitra: Suchi leaks போட்டோ எல்லாம் திரிஷா கொடுத்தது.. புது குண்டை தூக்கிப்போட்ட சுசித்ரா; பதிலடி தந்த திரிஷா

Tap to resize

Kangana Ranaut Election Nomination

அதன்படி, தனக்கு 90 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கங்கனா தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவர் சமர்பித்த பிரமாண பத்திரத்தில் தான் சண்டிகரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னிடம் 28 கோடி அசையும் சொத்துக்கள் மற்றும் 62 கோடி அசையா சொத்துக்கள் உள்பட தன்னிடம் 90 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கங்கனா தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Kangana Ranaut Net Worth

அதேபோல் கையில் 2 லட்சம் ரூபாய் ரொக்கமும், வங்கிக் கணக்கில் 1 கோடியே 35 லட்சமும் இருப்பதாக கங்கனா தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் பிஎம்டபிள்யூ, பென்ஸ், மெர்சிடிஸ் மேபேஜ் போன்ற சொகுசு கார்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், 6.5 கிலோ தங்கமும், 60 கிலோ வெள்ளியும், 3 கோடி மதிப்புள்ள 14 கேரட் வைர நகைகள் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது பெயரில் 50 எல்.ஐ.சி பாலிசிக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... முன்பு தனுஷ் - ஐஸ்வர்யா, இப்போது ஜிவி .பிரகாஷ் - சைந்தவி : விவாகரத்து பற்றி கே. ராஜன் வேதனைப் பேச்சு!

Latest Videos

click me!