Summer Hair Care Tips : கோடைகால தலைமுடியை பராமரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!!
கோடையில் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், இந்த விஷயங்களை முதலில் பின்பற்றுங்கள்.
பொதுவாகவே எல்லாரும் அடர்த்தியான, பளபளப்பான மற்றும் வலுவான கூந்தலை தான் விரும்புவார்கள். ஆனால் இந்த கோடை காலம் சருமத்தையும் கூந்தலையும் மிகவும் மோசமாக பாதிக்கும். இன்னும் சொல்ல போனால் வெயிலின் தாக்கத்தால் முடி உயிரற்றதாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில் அவற்றிற்கு கூடுதல் கவனிப்பு அவசியம்.
சூரிய ஒளி, மாசு, அழுக்கு, தவறான உணவுப் பழக்கம் போன்றவற்றால் முடி உயிரற்றதாகிறது. அந்தவகையில், இந்த கடுமையான வெப்பத்தில், இந்த குறிப்புகள் மூலம் உங்கள் முடியை வலுப்படுத்த சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாக பின்பற்றினால் நிச்சயமாக கோடையில் உங்கள் முடி நிச்சயமாக ஆரோக்கியமாக இருக்கும்.. சரி வாங்க இப்போது அதை பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம்..
முடியை மூடிவும்: கோடை காலத்தில், உங்கள் தலைமுடி வலுவான சூரிய ஒளியால் சேதமடையலாம். எனவே, அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தலைமுடியை ஒரு ஸ்டோல், தொப்பி அல்லது குடை போன்றவை பயன்படுத்த மறக்காதீர்கள்.
முடியை சுத்தமாக வையுங்கள்: கோடை காலத்தில், உங்கள் தலைமுடியில் அதிக அழுக்கு மற்றும் வியர்வை தங்கும். எனவே, அத்தகைய சூழ்நிலையில், முடியை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக எண்ணெய் பசையுள்ள கூந்தல் உள்ளவர்கள் அல்லது அதிகம் வியர்ப்பவர்கள் தலையை சுத்தமாக வைத்திருக்க கண்டிப்பாக அவ்வப்போது தலைமுடியைக் கழுவ வேண்டும்.
முடிக்கு எண்ணெய்: நீங்கள் தலைக்கு குளிக்கும் முன், தேங்காய் அல்லது வேறு ஏதேனும் எண்ணெய் கொண்டு ஷாம்பு போட்டு குளியுங்கள். குறிப்பாக தலைக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்த பின் குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். ஒருவேளை, உங்கள் தலைமுடி மிகவும் வறண்டிருந்தால், முந்தைய நாள் இரவு எண்ணெய் மசாஜ் செய்யவும், மறுநாள் ஷாம்பு போட்டு குளிக்கலாம். இது உங்கள் தலைமுடிக்கு நல்ல ஈரப்பதத்தை அளிக்கும்.
இதையும் படிங்க: இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சா இனி நீங்களும் ஷாம்புவிற்கு பிறகு கண்டிஷனர் யூஸ் பண்ணுவீங்க!
நல்ல ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தவும்: கோடை காலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், முடி ஆரோக்கியத்திற்கு ரசாயனங்கள் இல்லாத மற்றும் இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்துவது தான் நல்லது. இது உங்கள் தலைமுடியின் வறட்சியைக் குறைத்து, உங்கள் தலைமுடியை நீரேற்றமாக வைத்திருக்கும்.
இதையும் படிங்க: பெண்கள் தலைமுடி உதிர்வுக்கு இதுதான் காரணம்.. அதை எப்படி நிறுத்துவது தெரியுமா..?
இவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: ஹேர் ஸ்ட்ரெய்ட்னர், ப்ளோவர், ட்ரையர் போன்றவற்றை பயன்படுத்தினால் முடி அதிகமாக உடையும். இது உங்கள் முடியை சேதப்படுத்துகிறது மற்றும் பலவீனமாகவும் உலர்ந்ததாகவும் மாற்றும். எனவே, இவற்றை முடிந்தவரை குறைவாக பயன்படுத்த முயற்சிக்கவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D