Asianet News TamilAsianet News Tamil

பெண்கள் தலைமுடி உதிர்வுக்கு இதுதான் காரணம்.. அதை எப்படி நிறுத்துவது தெரியுமா..?

பெண்களே, உங்கள் தலை முடி அதிகமாக உதிர்ந்தால் என்ன செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் இந்த உதவி குறிப்புகள் உங்களுக்கு நிச்சயமாக உதவும்.

hair fall control tips for female reasons behind hair fall for women and how to stop it in tamil mks
Author
First Published Feb 17, 2024, 1:07 PM IST

முடி உதிர்தல் பிரச்சனை இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது முடி உதிர்தல் என்பது வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படக்கூடிய ஒன்று அல்ல. தற்போது, டீன் ஏஜ் முதல் முதியவர்கள் வரை என அனைவரும் இந்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். நம் அனைவரும் முடியை கவனித்துக் கொள்கிறோம். ஆனால் மன அழுத்தம், மாசுபாடு, பரம்பரை, மருந்துகளின் விளைவு, மோசமான வாழ்க்கை முறை போன்ற பிரச்சனைகளால் முடி உதிர்தல் பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் இந்த பிரச்சனையை குறைக்க என்ன செய்யலாம்? அதிலும் குறிப்பாக பெண்களுக்கு முடி உதிர்வதற்கான காரணங்கள் என்னவென்று எங்கு தெரிந்து கொள்வோம்.

hair fall control tips for female reasons behind hair fall for women and how to stop it in tamil mks

இரத்த சோகை: இந்தியாவில் பல பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளன. பல நேரங்களில் உணவு பழக்க வழக்கங்களில் கவனக்குறைவு காரணமாக பெண்கள் இரும்பு சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் ரத்த சோகைக்கு பலியாகின்றனர். இரத்தசோகை என்றால் உடலில் இரத்தம் இல்லாதது. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு மற்றும் உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதனால் முடி உதிர் ஆரம்பிக்கும்.

உணவு கட்டுப்பாடு: உடல் எடையை குறைக்க பெண்கள் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுகின்றனர். இதன் காரணமாக அவர்களின் உடலில் பல அதியவாசி ஊட்டச்சத்துக்கள் குறைகின்றனர். இதன் விளைவாக முடி உதிர தொடங்குகிறது. எனவே, எப்போது ஊட்டச்சத்து நிபுணருடன் கலந்து ஆலோசித்த பின்னரே உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள். இல்லையெனில், உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

இதையும் படிங்க:  தினமும் தலைக்கு குளித்தால் முடி கொட்டுமா? முடி உதிர்வு குறித்த கட்டுகதையும், உண்மையும் இதோ..!

hair fall control tips for female reasons behind hair fall for women and how to stop it in tamil mks

தைராய்டு பிரச்சனை: தைராய்டு அளவு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்போது தைராய்டு சுரப்பி தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாது. இதன் காரணமாக உடலில் அத்தியாவசிய புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களின் குறைபாடு உள்ளது. முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் தேவை. எனவே, முடி உதிர்தலுக்கு பின்னால் தைராய்டு உள்ளது.

கர்ப்பகாலம்: கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக முடி உதிரத் தொடங்குகிறது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் வைட்டமின்கள், இரும்பு போன்றவற்றை எடுத்துக் கொண்டால் நீங்கள் இழந்த முடி மீண்டும் வளரும்.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் முடி கொத்து கொத்தா கொட்டுதா? தடுக்க சூப்பரான டிப்ஸ் இதோ..!!

முடி ஸ்டைலிங் கருவிகளின் பயன்பாடு: பலர் தங்கள் தலைமுடியை ஸ்டைல் செய்ய ஸ்ட்ரெய்ட்னர்கள், கர்லர்களை அல்லது ஹேர் டிரையர்களை பயன்படுத்திகின்றன. இது உங்கள் தலைமுடி அழகாக மாற்றலாம். ஆனால், இது தலைமுடிக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும். அவற்றை தினமும் பயன்படுத்துவதால் முடி வலுவிழந்து உதிரத் தொடங்கும்.

hair fall control tips for female reasons behind hair fall for women and how to stop it in tamil mks

முடி உதிர்வை தடுப்பது எப்படி?

  • ஒமேகா 3, பயோடின், புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • லேசான ஷாம்பு பயன்படுத்துங்கள். 
  • முடி அதிகமாக உதிர்ந்தால் வேர்களை மெதுவாக மசாஜ் மசாஜ் செய்யவும் இது முடியை வலிமையாக்கும் 
  • உங்கள் முடி வகைக்கு ஏற்ப வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் பாக்குகளை பயன்படுத்துங்கள்.
  • ஈரமான முடியை ஒருபோதும் சீர்பாதீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios