பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தமிழர்; யார் இந்த ராஜலிங்கம்?

By SG Balan  |  First Published May 15, 2024, 8:56 AM IST

உ.பி.யில் குஷிநகர் மாவட்ட கலெக்டராக இருந்த ராஜலிங்கம், மக்களிடம் நல்மதிப்பையும் பெற்றார். சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, ராஜலிங்கத்தை தோளில் தட்டிப் பாராட்டினார்.


மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். வாரணாசியில் தேர்தல் அதிகாரியாகவும் மாவட்ட ஆட்சியராகவும் உள்ள தமிழர் ஒருவரிடம்தான் தனது வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டத் தேர்தல் முடிந்துள்ளன. ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிக் கட்டத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திங்கட்கிழமை பிரதமர் மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Latest Videos

undefined

அபிஜித் முகூர்த்தம் என்ற அரிதான முகூர்த்த நேரத்தில் மோடி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் ஆகியோரும் சென்றிருந்தனர்.மோடியின் வேட்புமனுவை 4 பேர் முன்மொழிந்து கையெழுத்திட்டனர்.

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ அனைத்திற்கும் ஒரே டிக்கெட்! விரைவில் வரும் சூப்பர் திட்டம்!

வாரணாசியில் தமிழர்!

மோடியின் வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டவர் வாரணாசி தொகுதியின் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான எஸ்.ராஜலிங்கம். நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ராஜலிங்கம் 2022 நவம்பர் மாதம் முதல் வாரணாசி கலெக்டராக இருக்கிறார்.

இதற்கு முன் உ.பி.யில் குஷிநகர் மாவட்ட கலெக்டராக இருந்த ராஜலிங்கம், அரசுத் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். இதனால், மக்களிடம் நல்மதிப்பையும் பெற்றார். சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, ராஜலிங்கத்தை தோளில் தட்டிப் பாராட்டினார்.

குஷிநகருக்கு முன், சுல்தான்பூர் ஆட்சியராக இருந்தார். அப்போது 50 ஆண்டுகளாக நடைபாதையில் வசித்துவந்த குடும்பங்களுக்கு உதவி செய்து அவர்களின் வாழ்வாதாரம் உயரக் காரணமாக இருந்தார்.

2006ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ராஜலிங்கம் முதலில் உ.பி.யில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார். 2009ஆம் ஆண்டு அதே மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக மாறினார். ராஜலிங்கத்தைப் போல பல தமிழர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் உள்ளனர்.

UPI மூலம் பணம் பறிக்கும் சைபர் கிரிமினல்ஸ்! பேமெண்ட் செய்யும்போது ஒரு செகண்ட் இதை செக் பண்ணுங்க!

click me!