Delhi Police : அனுதினமும் ஒரு புது வகை மோசடி குறித்த தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் டெல்லி போலீசார் நூதன திருட்டு குறித்து மக்களை எச்சரித்துள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் சுமார் 200 விமானங்களில் பயணம் செய்த நபர், 100 நாட்களுக்கும் மேலாக நாட்டில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து விமான நிலையங்களில் கொள்ளை சம்பவங்களை நடத்தி, கடந்த ஒரே ஆண்டில் பல பயணிகளிடம் இருந்து பல லட்சம் மதிப்புமிக்க பொருட்களை திருடியது தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் ஐதராபாத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற பெண் ஒருவர் தனது கைப்பையில் இருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக கூறியதையடுத்து, டெல்லி போலீசார் புதிய திருட்டு முறையை முறியடித்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து வந்த நபர் ஒருவரின் கேபின் பையில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டதாக போலீசாருக்கு மற்றொரு புகார் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சி படுதோல்வி: பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!
இந்த திருட்டு சம்மந்தமாக விமான நிலையங்களில் இருந்து பல மணிநேர CCTV காட்சிகளை போலீசார் ஸ்கேன் செய்து ராஜேஷ் கபூர் என்ற நபரை இப்போது கைது செய்துள்ளனர். டெல்லி, ஹைதராபாத் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஸ்கேன் செய்த பின்னர் டெல்லியின் பஹர்கஞ்சில் இருந்து ராஜேஷ் கபூர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர், நாட்டின் மிகவும் பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றான விமான நிலையங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக எப்படி இந்த குற்றங்களை நிறைவேற்றினார் மற்றும் அவரால் எப்படி தப்பிக்க முடிந்தது என்று காவல்துறையினரிடம் கூறினார். இணைப்பு விமானங்களில் பயணித்த பயணிகளை குறிவைத்து அந்த நபர் திருட்டு வேளையில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறை துணை ஆணையர் உஷா ரங்க்ராணி தெரிவித்தார்.
உதாரணமாக, ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு பயணித்த பெண், டெல்லியில் உள்ள ஐஜிஐ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற வேண்டியிருந்தது. இதேபோல், அமெரிக்காவில் வசிக்கும் வர்ஜிந்தர்ஜித் சிங், அமிர்தசரஸில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்து, டெல்லியில் இருந்து இணைப்பு விமானத்தில் இருந்தார்.
வயதானவர்கள் மற்றும் பெண் பயணிகளை தான் இலக்காக தேர்ந்தெடுத்து விமான நிலையத்தில் அவர்களின் நடத்தையை அவதானித்து அவர்களிடம் அந்த நபர் திருடியதாக மூத்த காவலர் ஒருவர் கூறினார். முதல் அவர் அவர்களைப் பின்தொடர்வார் அல்லது பையில் உள்ள மதிப்புமிக்க பொருட்களைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற, சாமான்கள் அறிவிப்பு சீட்டில் உள்ள தகவலை தந்திரமாக படித்துள்ளார்.
அந்த நபர் பெரும்பாலும் போர்டிங் வாயிலில் அடிக்கடி செல்வதை கண்டதாகவும், அதற்கு முன், அவர் தனது இலக்குகளின் நடத்தையை கவனித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் பயணிகளுக்கு அருகில் உட்கார வேண்டும் என்பதற்காக தனது இருக்கையை மாற்றுமாறு விமான நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் அருகிலேயே அமர்ந்து, அவர்களிடம் உள்ள விலையுயர்ந்த பொருட்களை திருடிவிட்டு சென்றுவிடுவார் என்றும் போலீசார் தங்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். 2023ம் ஆண்டில் சுமார் 200க்கும் அதிகமான விமானங்களில் பயணித்து அவர் இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ரேபரேலி உள்ளூர் சலூன் கடையில் தாடியை ட்ரிம் செய்த ராகுல் காந்தி!