MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • வெயில் காலத்தில் குழந்தைகளின் தலைமுடியை பராமரிக்க தரமான 5 டிப்ஸ்!!

வெயில் காலத்தில் குழந்தைகளின் தலைமுடியை பராமரிக்க தரமான 5 டிப்ஸ்!!

கோடை விடுமுறையில் குழந்தைகள் விளையாடிவிட்டு வீடு திரும்பும் போது அவர்கள் தலைமுடி அழுக்கு, வியர்வை என சேதமாகி இருக்கும். இதையெல்லாம் கடந்து அவர்களுடைய தலைமுடியை பராமரிப்பது எப்படி என்பதை இங்கு காணலாம். 

2 Min read
Author : maria pani
Published : May 29 2023, 05:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

வெயில் காலம் வந்தாலே கூடவே பொடுகு, முடி வறட்சி, முடி உதிர்வு, உச்சந்தலையில் அரிப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படும். பெரியவர்களின் நிலையே இது என்றால், குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும். வெயில் காலத்தில் குழந்தைகளின் மென்மையான முடிகளில் கடுமையாக பாதிப்பு ஏற்படும். முடி உதிர்வு, வறட்சி, முடி உடைதல் போன்ற பாதிப்புகள் வரும். இதை தடுத்து குழந்தைகளின் தலைமுடியை பராமரிப்பதை குறித்து இங்கு காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

சிக்கு! சிக்கு! 

வெயில் காலத்தில் குழந்தைகளுடைய தலைமுடியில் சிக்கு, வியர்வை அதிகமாக இருக்கும். அப்போது முடியில் இருக்கும் சிக்கை மென்மையான முறையில் நீக்க முயற்சி செய்ய வேண்டும். இதற்கு மெல்லிய பற்கள் உடைய குழந்தைகளுக்கான சீப்பை உபயோகம் செய்யுங்கள். அவர்களுடைய முடியில் சிறிய சீப்பை வைத்து வாரினால் வலி உண்டாகும். கவனம்.   

36

ஈரப்பதம்:

கோடை காலங்களில் குழந்தைகளின் தலைமுடி ஈரப்பதமாக இருக்க வேண்டும். ஏனென்றால் வறட்சியாக இருந்தால் முடி உதிர்வு அதிகரிக்கும். ஓட்ஸ், அவகேடோ ஆகிய பொருட்கள் கலந்துள்ள ஷாம்பூவை குழந்தைகளுக்கு உபயோகம் செய்யலாம். இவை பயன்படுத்தினால் குழந்தைகளின் முடி மென்மையாக ஈரப்பதமாக இருக்கும். வாரந்தோறும் இந்த மூலப்பொருள்கள் உள்ள எண்ணெய், ஷாம்பூவை பயன்படுத்தலாம். 

46

இறுக்கமான ஹேர்ஸ்டைல்:

குழந்தைகளை போலவே அவர்களுடைய முடியும் மென்மையானது. அதனால் அவர்களிக்கு இறுக்கமான ஹேர்ஸ்டைல் செய்ய வேண்டாம். ஜடை, போனிடெயில், கொண்டை ஆகிய இறுக்கமான ஹேர்ஸ்டைல்கள் செய்தால் அவர்களுடைய தலைமுடிக்கு சேதம் உண்டாகும். வெயில் காலத்தில் எப்போதும் இறுக்கமான ஹேர்ஸ்டைல் செய்யவே கூடாது. 

சாப்பிட்டதும் வெறும் 100 அடிகள் நடைபயிற்சி.. அதனால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

56

உணவுகள்: 

தலைமுடியை பராமரிக்க குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக உணவுகளை கொடுக்க வேண்டும். வைட்டமின்கள், தாதுக்கள் காணப்படும் உணவுகள் தலைமுடியை பராமரிக்க உள்ளிருந்து ஊட்டம் கொடுக்கும். பாதாம், அக்ரூட், சியா விதைகள், பூசணி விதைகள் ஆகிய நட்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு தினமும் கொடுங்கள். நாள்தோறும் குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் உறுதிப்படுத்துங்கள். உணவும் நீரும் முக்கியம். 

66

தொப்பி அல்லது ஸ்கார்ப் வையுங்கள்: 

சூரியனின் புற ஊதாக் கதிர்களால் தலைமுடி சேதமாகாமல் இருக்க குழந்தைகளின் தலைமுடிக்கு வெயிலில் வெளியே செல்லும்போது தொப்பி அல்லது ஸ்கார்ப் வையுங்கள். இதனால் அவர்களுடைய தலைமுடி சேதம் ஆகாமல் பாதுகாக்கப்படும். 

சும்மா நினைக்காதீங்க! சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோயை தடுக்க இந்த 'கருப்பு பீன்ஸ்' உங்களுக்கு உதவுமாம்...!

About the Author

MP
maria pani
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image2
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image3
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved