சும்மா நினைக்காதீங்க! சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோயை தடுக்க இந்த 'கருப்பு பீன்ஸ்' உங்களுக்கு உதவுமாம்...!
மற்ற பீன்ஸ்களை விட கருப்பு பீன்ஸில் பல வகையான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
கருப்பு பீன்ஸ் கேள்விப்பட்டிருக்கீங்களா? இதில் தான் மற்ற பீன்ஸ் வகையை விடவும் வித்தியாசமான கார்போஹைட்டுகள் காணப்படுகின்றன. இதை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கும். இந்த பீன்ஸ் பார்ப்பதற்கு நாம் வேக வைத்து உண்ணும் தட்டாம்பயிறை போன்று கருப்பு நிறத்தில் இருக்கும்.
கருப்பு பீன்ஸ் ஊட்டச்சத்துக்கள்
*நார்ச்சத்து,
*புரதம்
*ஃபோலேட்,
*தாமிரம்,
*வைட்டமின் பி1,
*பாஸ்பரஸ்,
*மாங்கனீசு,
*மெக்னீசியம்,
*இரும்புச்சத்து போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை கருப்பு பீன்ஸில் இருந்து பெறமுடியும்.
குடல் ஆரோக்கியம்
கருப்பு பீன்ஸ் உண்பதால் சிறுகுடல் ஸ்டார்ச் அழுத்தத்திலிருந்து விடுபட ஆற்றல் கிடைக்கும். இந்த பீன்ஸ் பெருங்குடலுக்கு அனுப்பப்பட்ட பின்னர் குடலில் இருக்கும் பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு தான் வெளியேறும். இதன் காரணமாக சிறுகுடலில் இருக்கும் அதிக அழுத்தம் குறைந்து குடலை ஆரோக்கியமாக வைக்கும்.
புரதம்
சிக்கன், மீன் ஆகிய அசைவ உணவு வகைகளில் இருக்கும் புரதச்சத்து கருப்பு பீன்ஸிலும் உள்ளது. அசைவம் விரும்பாதவர்களுக்கு புரதச்சத்தை வாரி வழங்கும் வரப்பிரசாதம் தான் இந்த கருப்பு பீன்ஸ். தாவர மூலங்களில் இருந்து பெறப்படும் நார்ச்சத்துக்களும் இதில் உள்ளன. குறிப்பாக கருப்பு பீன்ஸில் அசைவ உணவுகளில் உள்ள புரதங்களில் இருக்கும் கொலஸ்ட்ரால், சாச்சுரேட்டட் கொழுப்புகள் போன்றவை கிடையாது. இதனால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
கெட்ட கொலஸ்ட்ரால்
நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். கருப்பு பீன்ஸில் காணப்படும் நார்ச்சத்து கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும். இதில் உள்ள டயட்டரி ஃபைபர் உங்கள் பசியைக் கட்டுக்குள் வைக்கும். நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும். இதனால் எடை தானாக குறையும்.
கருப்பு பீன்ஸில் உள்ள பாலிபினைல்கள் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட்டுகளாகச் செயல்படுகின்றன.கருப்பு பீன்ஸில் உள்ள பாலிபினைல்கள், பிளவனாய்டுகள், ஆந்தோசயனின்கள் போன்றவை உங்களை தாக்கும் நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. நோய் தாக்கம் ஏற்படும்போது ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் போல செயல்படுகின்றன. புற்றுநோய் வராமல் தடுக்கும்.
இதையும் படிங்க: மண்பானையில் சமையல் செய்யுறப்ப இந்த விஷயத்தை கண்டிப்பா கவனிங்க!!!