AC Tips For Summer : கோடையில் ஏசியை பயன்படுத்துபவரா..? இந்த டெம்பரேச்சர்ல வைங்க ஆபத்து வராது!

First Published Apr 18, 2024, 11:47 AM IST

உங்கள் வீட்டில் ஏசி இருந்தால் கோடையில் ஏசியின் வெப்பநிலை என்னவாக இருக்க வேண்டும். அதை வயது அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

கொளுத்து இந்த கோடை வெப்பத்தில் வீட்டில் ஃபேன் மற்றும் ஏசி இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால், நாம் ஏசி-யை கவனமாகப் பயன்படுத்தப்படாவிட்டால் நிறைய சிக்கல்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக, ஏசியின் வெப்பநிலை சரியாக இல்லாவிட்டால், அது மின் கட்டணத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமாம். அதுமட்டுமன்றி, இதனால் தூக்கமும் உடல்நிலையும் கெடும். எனவே, கோடையில் ஏசி வெப்பநிலை என்னவாக இருக்க வேண்டும்..? என்று இந்த பதவில் பார்க்கலாம்.

பொதுவாகவே, அறையின் வெப்பநிலை மற்றும் வெளிப்புற வெப்பநிலையை மனதில் வைத்து ஏசி வெப்பநிலையை சரியாக வைத்தால், இரவு நன்றாக தூங்கலாம். ஒருவேளை, ஏசியின் வெப்பநிலையை மிகவும் குறைவாக வைத்தால், அது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சரி இப்போது, ஏசியின் வெப்பநிலையை எப்படி வைத்தால்,  நிம்மதியாக தூங்கலாம். இதை வயது அடிப்படையில் வைத்து நாம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏசி வெப்பநிலையை 21 டிகிரி செல்சியஸில் வைத்திருந்தால் நல்லது. இப்படி வைத்தால் அவர்கள் நிம்மதியாக தூங்குவார்கள். வெளியில் அதிக வெப்பத்தையும் உள்ளே அதிக குளிரையும் அவர்களால்  தாங்க முடியாது என்பதால், 21 அறை வெப்பநிலை தான் அவர்களுக்கு ஏற்றது.

அதுபோல, பெரியவர்களுக்கு ஏசி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க வேண்டும். இது அவர்களுக்கு ஒரு வசதியான தூக்கத்தை கொடுக்கும். ஒருவேளை 20 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக இருந்தால், அவர்கள் நோய்வாய்ப்பட வாய்ப்பு உள்ளது.

எக்காரணம் கொண்டு வயதானவர்களுக்கு, அறையின் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருக்க கூடாது. அது அவர்களுக்கு ஆபத்து. மேலும் அதிக குளிர் காரணமாக அவர்களின் உடல்நிலை மோசமடையும். எனவே, அவர்களுக்கு ஏசி வெப்பநிலையை சரியாக வைப்பது தான் நல்லது

.

click me!